உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




95

இலக்கியம் முழுதும் செய்யுளாகவே இருந்ததனால், இலக்கிய வழக்கு செய்யுள் வழக்கெனப்பட்டது. எல்லாப் புலவரும் பாவலரா யிருந்ததனால், பாவலர் எனப்படாது புலவர் என்றே பெயர் பெற்றனர். அவர் இக் காலத்துப் பாவலர் போல், ஏடும் எழுது கோலும் எடுத்து ஓரிடத் தமர்ந்து எண்ணியெண்ணி அடித்துந் திருத்தியும் செய்யு ளியற்றாது, உரைநடையிற் பேசுவதுபோல், எங்கும் என்றும் எப்பொருளும்பற்றிக் கடுத்துப் பாடியவராவர். ஆசிரியரும் அறிவுறுத்துவோரும் கணியரும் ஆகிய கல்வித் தொழிலாளர் மட்டுமன்றி உழவர், வணிகர், மருத்துவர், கொல்லர் முதலிய பல்வகைப் பிற தொழிலாளரும், குறிஞ்சிநிலத்துக் குறவரும், பாலைநிலத்துக் கள்ளர் மறவரும், முல்லைநிலத்து ஆயரும், நெய்தல்நிலத்துப் பரவரும் ஆகியவருள்ளும் சிலர் பாவலரா யிருந்தனர். அதனாலேயே, தலைக்கழகத்துப் புலவர் ஐந்நூற்று தான்பதின்மர் உள்ளிட்டு, நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினர்.

நாற்பத்தொன்பதின்மர்

இலக்கணம்

தமிழில் இலக்கண முதனூல் இயற்றியவர், முற்றத் துறந்து முழுமுனிவரான ஒரு மெய்ப்பொருளறிஞர்.

66

வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்.

(தொல்.1594)

முனைதல் = வெறுத்தல். முனை - முனைவு - முனைவன். முனிதல் = வெறுத்தல். முனி - முனிவு - முனிவன் - உலகை வெறுத்துப் பற்றைத் துறந்தவன்.

எழுத்து

முதனூலாசிரியர் ஒரு சிறந்த மெய்ப்பொருளறிஞரா யிருந்த தனாலேயே, உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் (உயிரியும்) போன்று எழுத்தொலிகள் மூவகைப்பட்டிருத்தலைக் கண்டு, முப்பொருட் பெயர்களையே எழுத்தொலிகட்கும் உவமையாகுபெயராக இட்டிருக்கின்றார். தானாக இயங்கும் உயிரைப் போன்று தானாக வொலிக்கும் உயிரெழுத்தும்; உயிரின் சேர்க்கையின்றித் தானாக வொலிக்காத மெய்யெழுத்தும்; உயிரொடு சேர்ந்த வுடம்பு அதனால் இயக்கப்பட்டு அதனொடு ஒன்றி அதனினும் முற்பட்டுத் தோன்றும் உயிர்மெய் போன்று, உயிரெழுத்தொடு சேர்ந்த மெய்யெழுத்து ஒலிக்கப்பட்டு அதனொடு ஒன்றி அதனினும் முற்பட்டுத் தோன்றும் உயிர்மெய்யெழுத்தும் இருத்தலைக் காண்க. உயிர்மெய்