உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

திசைபற்றிப் பாண்டியநாடு தென்புலம் என்றும், சோழநாடு குணபுலம் என்றும், சேரநாடு குடபுலம் என்றும் சொல்லப்பட்டன. பாண்டியனுக்குத் தென்னன் அல்லது தென்னவன் என்னும் பெயரும் எழுந்தது. முந்நாடும் தனித்தனி நாடென்றும், ஒருங்கே தமிழகம் என்றும் பெயர் பெற்றன.

கடல்கோட்குப்பின் எஞ்சியிருந்த பழம்பாண்டி நாட்டுப் பகுதியின் ஊடு, குமரி என்னும் பேரியாறு ஓடிற்று.

CC

தெனாஅ துருகெழு குமரி'

என்பதனால் அதன் பெருமையும் வேகமும் அறியப்படும்.

66

வார ணாசியோர் மறையோம் பாளன் ஆரண வுவாத்தி அபஞ்சிகன் என்போன் பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து கொண்டோற் பிழைத்த தண்ட மஞ்சித் தென்றிசைக் குமரி யாடிய வருவோள்

99

(புறம்.6:2)

(L0600CLD.13:3-7)

என்பதனால், பண்டைநாளில், வடநாட்டிற் கங்கையாற்றின் கரையில் வாழ்ந்தோரும், தம் தீவினை போக்க வந்து நீராடுமாறு, குமரியாறு ஒரு சிறந்த திருநீர்நிலையாக விருந்ததை யறியலாம்.

பாண்டியன் தன் தலைநகரைக் குமரியாற்றின் கயவாயில் அமைத்ததாகத் தெரிகின்றது. கயவாய் என்பது ஆறு கடலொடு கலக்குமிடம்.

கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப

99

(மலைபடு.528)

பாண்டியன் தலைநகர் கடல்வழியாக வருவோர்க்கு வாயில் போல் இருந்தமையால், கதவம் அல்லது கதவபுரம் என்று பெயர்

பெற்றிருக்கலாம்.

கபாடபுரம் என்னும் வடசொல் ‘அலைவாய்’, என்பதன் மொழி பெயர்ப்பாகவும் இருக்கலாம்.

கடத்தல் = கடந்துசெல்லுதல். கட-கடை = வாயில். கட-கடவு = கடந்து செல்லும் வழி. கடவு - கதவு = வாயில், வாயிலடைப்பு. ஒ. நோ:door-shutter, entrance. கதவு - கதவம் = பெருங்கதவு. கதவம் - வ. கவாட் - கபாட (முறைமாற்றுப் போலி).

வடமொழியில் இச் சொற்கு மூலம் இல்லை.

"குமரிமலை, கடல்கொண்ட நாட்டில் எவ்வாறு அமைந் திருந்தது என்று ஆயுமிடத்து, அந் நாட்டின் பகுதிகளை நன்கறிந்து