உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


ட்டேம்” என்று ஒரு வானுரை யெழுந்தது! ‘சூத்திர’ வேந்தன் நிலத்தேவரை ஒன்றும் செய்ய இயலவில்லை.

இராசராசன் மகனான முதலாம் இராசேந்திரனும் (கி. பி.1014- 42) தஞ்சைப் பெரிய கோவிலிற் பூசைசெய்து வந்த தன் குருவாகிய சர்வ சிவ பண்டிதருக்கும், ஆரிய நாட்டிலும் மத்திய நாட்டிலும் கௌட (வங்க) நாட்டிலுமிருந்த அவர் மாணவருக்கும், ஆண்டு தோறும் ஈராயிரங் கலம் நெல் குரவ நுகர்ச்சியாகக் (ஆசாரிய போகமாகக்) கொடுக்குமாறு கட்டளை பிறப்பித்தான்.

கி.பி.1034-ல், எண்ணாயிரம் என்னும் இடத்தில், 300 பிராமண மாணவரும் 10 பிராமண ஆசிரியரும் கொண்ட ஓர் காண்ட ஓர் இலவச மறைநூல் விடுதிக் கல்லூரி கட்டித் தானஞ் செய்தான்.

வீரராசேந்திரச் சோழன் (கி.பி. 1062-67) திருமுக்கூடல் என்னு மிடத்தில், பிராமண மாணவர்க்கு வேதமும் பிறநூற் கலைகளும் கற்பிக்குமாறு, மருத்துவசாலையொடு கூடிய ஓர் இலவச விடுதிக் கல்லூரியைக் கட்டிக் கொடுத்தான்.

மூன்றாங் குலோத்துங்கன் (கி.பி. 1178-1218) திருவொற்றியூரிற் பிராமண மாணவர்க்குப் பாணினீயம் கற்பிக்குமாறு, வியாகரண தான வியாக்கியான மண்டபம் ஒன்று அமைத்து, அதற்கு 60 வேலி நிலங் கொண்ட குலோத்துங்கன் காவனூர் என்ற ஊரை இறையிலி யாக்கினான். அவன் குருவும் இலாட நாட்டுப் பிராமணரே.

பல கோவில்களில் துலாபார மண்டபம் என்றே ஒன்று கட்டப் பட்டிருந்தது. துலாபாரம் என்று ஒரு வரியும் குடிகளிடம் வாங்கப்பட்டது. சோழர் போன்றே பாண்டியரும் ஒழுகினர். சேரரைப்பற்றிச் சொல்லவே வேண்டுவதில்லை. இங்ஙனம் குடிகள் பொதுப்பணம், தமிழும் தமிழனும் தளரவும், பிராமணனும் பிராமணியமும் வளர்ந்தோங்கவும் வாரியிறைக்கப்பட்டது.

கடுங்கோன்,காய்சினவழுதி,இளஞ்சேட்சென்னி,நெடுங்கிள்ளி, மாவலி,உதியஞ்சேரலாதன் என்றிருந்த அரசர் தனித்தமிழ்ப் பெயர்க ளெல்லாம் ஜடில பராந்தகன், விஜயாலயன், பாஸ்கர வர்மன் என வடசொற் பெயர்களாக மாறின.

பாண்டியர் பெயருக்கு முன் மாறவர்மன் ஜடாவர்மன் என்பனவும்,சோழர்பெயருக்கு முன் ராஜகேசரி பரகேசரி என்பனவும் அடைமொழிகளாகச் சேர்க்கப்பட்டன.

அரசர் மெய்க்கீர்த்திகள் ஸ்வஸ்தி ஸ்ரீ என்று தொடங்கின. டையிடை யிடை சமற்கிருதச் சொற்கள் கலந்தன. முன்னும் பின்னும் சமற்கிருதச் சொலவங்களும் (சுலோகங்களும்) அமைந்தன.

தடை

ம்