உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


தமிழ நால்வகுப்பிற்கும் ஆரிய நால்வரணத்திற்கும் வேறுபாடு:

தமிழம்

தமிழப் பாகுபாடு தொழில்

ஒன்றையே அடிப்படையாகக்

கொண்டது.

அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவோர், அந்தண்மை (அழகிய குளிர்ந்த அருள்) பூண்ட துறவியர். அந்தண்மை பூண்ட இல்லறத்தாரான பார்ப்பாரும் அந்தணர் என்னும் பெயருக் குரியர். இவ்விரு வகுப்பிற்கும் இனகுலமத இ

வரையறையில்லை.

அரசர் என்பார் ஆள்குடியினர்.

வணிகர் என்பார் பண்டமாற்று அல்லது வாணிகம் ஒன்றே செய்பவர்.

வேளாளர் என்பார் பயிர்த்தொழில் ஒன்றே செய்பவர்.

நால்வகுப்பாருள்ளும் வேளாளனே உயர்ந்தவன். அவன் உழவுத் தொழிலும் வேளாண்மையுஞ் செய்வதனாலேயே, உலகம் நடைபெற்று வருகின்றது.

கல்வி எல்லார்க்கும் பொது. எவ்வகுப்பிலும் எக்குடும்பத்திலும் அறிஞன் தோன்றலாம்.

திறமையும் விருப்பமும்பற்றி ஒரு வன் எத்தொழிலையுஞ் செய்ய லாம்; எச்சமையத்திலும்

தொழில் மாறவுஞ் செய்யலாம்.

ஆரியம்

ஆரியப் பாகுபாடு நிறத்தையும் பிறப்பையுமே அடிப்படையாகக் காண்டது. வரணம் நிறம், சாதி பிறப்பு. ஜன்-ஜா-ஜாதி = பிறப்பு, பிறவிக் குலம்.

ஆரியப் பூசாரியாரே பிராமணர், துறவு பிராமணனுக்கே உண்டு. ஆதலால், அவனே வீடுபேறடைய முடியும்.

சத்திரியர் என்பார் ஆள்குடியினரும் போர்மறக் குலத்தாரும் ஆவர். வைசியர் என்பார், வாணிகம் வேளாண்மை ஆ வளர்ப்பு ஆகிய முத்தொழில் செய்பவர். சூத்திரர் என்பார் பல்வேறு கைத்தொழிலும் கூலிவேலையும் அடிமைத் தொண்டும் செய்பவர். நால்வரணத்தாருள்ளும் பிராம ணனே உயர்ந்தவன். அவன் வேள்வி வளர்ப்பதனாலேயே, உலகம் நடைபெற்று வருகின் றது.உழும்போது புழுப்பூச்சிகள் கொல்லப்படுவதால், உழவுத் தொழில் மிக இழிவானது.

கல்வி பிராமணனுக்கே உரியது. மற்றெல்லாரும் மற்றத்

தொழில்களே செய்தல் வேண்டும்.

நால்வரணமும் இறைவனாற் படைக்கப்பட்ட வை. ஒவ்வொரு வனும் தன் வரணத்திற்குரிய

தொழிலையே செய்தல் வேண்டும்.

இங்ஙனம் எல்லாத் தொழிலாளரும் நான்கு பிறவி வகுப்பிற்குட் புகுத்தப்பட்டுவிட்டனர். பிராமணர் வந்த புதிதில் வெண்ணிறமா யிருந்ததனாலும்; வெப்ப நாடாகிய தமிழகத்தில் வெயிலிற் காய்ந்து வேலை செய்பவர் கருநிறமாயும், வீட்டிலும் நிழலிலும் இருந்து வேலை செய்பவர் பொன்னிறமாயும், இவ்விரு சாரார்க்கும் இடைப்பட்டவர் செந்நிறமாயும் இருப்பதனாலும்; நிறம்பற்றி மக்களை நால்வகுப்பாக வகுப்பதற்குத் தோதாக விருந்தது. ஆயின்,