உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

ஏலக்கொத்து

மிளகுகொத்து

நற்சீரகக் கொத்து

I

தக்காளிக் கொத்து

-

தென்னங்கொத்து

குடையன் கிளை, அரசுமான் கிளை. செகமண்டலாதிபன் கிளை, வீர முடிதாங்கினான் கிளை.

நாட்டை வென்றான் கிளை, தருமர்கிளை.

சங்கரன் கிளை, சாத்தான் கிளை.

ஒளவை கிளை, சாம்புவன் கிளை.

பட்டம்-தேவன், தலைவன், கரையாளன், சேர்வைகாரன்.

முத்தரையன் (முத்திராசு, முத்திரியன்)

வேளிர் (குறுநில மன்னர்) பதவியும் விருந்தோம்பி வேளாண்மை செய்யும் இயல்புங்கொண்ட முத்தரையர் என்னும் வகுப்பார், 6ஆம் நுாற்றாண்டிலேயே தமிழ்நாட்டிலிருந்தமை,

66

பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும் கருனைச்சோ றார்வர் கயவர்

நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவா தார்

என்னும் நாலடிப் பகுதிகளால் அறியக் கிடக்கின்றது.

(நாலடி. 200)

(நாலடி. 296)

அவர் தஞ்சைக்கும் புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியை ஆண்டு வந்தவர் என்பது, செந்தலைக் கல்வெட்டால் தெரிய வருகின்றது. பல்லவர் கீழ்ப்பட்டிருந்த சோழர், தஞ்சையை ஆண்டு வந்த பெரும்பிடுகு முத்தரையனை வென்ற செய்தி, திருவாலங் காட்டுச் செப்பேட்டிற் குறிக்கப்பெற்றுள்ளது.

இன்று தஞ்சை திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிற் பயிர்த் தொழில் செய்து வாழும் முத்திரியர் என்பார், பண்டை முத்தரையர் வழியினரே.

தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்பிய முத்தரையர் என்னும் பட்டங் கொண்ட கள்ளர் வகுப்பினர், முத்தரையரின் படைமறவர் வழிவந்தவராகவே யிருத்தல் வேண்டும்.

கடைக்கழகக் காலத்திற் புல்லியும் பிற்காலத்தில் திருமங்கை யாழ்வாரும் போன்ற கள்வர் கோமான்கள் பலர் இருந்தமை வெள்ளிடைமலை. ஆயின், முத்தரையர் வேளிர் மரபினர் என்பதே நடுநிலை முடிபாம்.