உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

பகுத்தறிவிழப்பு: தமிழருள் தலைமையான குலத்தானாகக்

கருதப்படும் மரக்கறி வெள்ளாளன், பொற்கலத்தில் நன்னீர் கொடுப்பினும் குடிக்க மறுக்கும் பிராமணன், வெள்ளாளனின் மிகத் தாழ்ந்தவளாகக் கருதப்படும் இடைச்சி, பழமட்கலத்தில் தண்ணீர் கலந்து விற்கும் தயிரை, வானமுதம் போல் வாங்கிக் குடிப்பது கண்டும், தான் அவனின் தாழ்ந்தவனென்று மானமின்றிச் சொல் கின்றான்.

பிராமணரில்லா மற்ற நாடுகளிலெல்லாம் என்றும் மாறக்கூடிய தொழில்பற்றியே மக்கள் வகுப்புகள் ஏற்பட்டிருத்தல் கண்டும் பிரா மணருள்ள இந் நாட்டில் மட்டும் குலங்கள் இறைவன் படைப் பென்று கருதுவது, பகுத்தறிவின்மையைத் தெளிவாகக் காட்டும்.

தன்மான மின்மை: முதற் குலோத்துங்கன் காலத்தில், பையற் பருவத்து ஆளவந்தார் வித்துவ சனகோலாகலன் என்னும் ஆக்கி யாழ்வானோடு தருக்கித்து, அரசி வேத வுரைப்படி கற்பிழந்தவ ளென்று, வேத்தவையில் அரசன்முன் சொன்னதை அவையோர் ஒப்புக் கொண்டதும் அவ்வாறே நச்சினார்க்கினியரும் தொல் காப்பியவுரை வரைந்திருப்பதும், கோழிக்கோட்டு மன்னரான சாமொரின் குடியினர் தாம் மணந்த பெண்டிரை முதல் முந்நாள் பிராமணன் நுகரவிட்டதும், தமிழரின் அல்லது தமிழ வழியினரின் தன்மானமின்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம்.

நெஞ்சுரமின்மை: திருவரங்கத்தில் அரங்கநாயகி மூக்குத்தியைத் திருடிய பிராமணப் பெண், அத் தெய்வம் ஏறியவளாக நடித்து, கழுநீர்ப்பானையினின்று அம் மூக்குத்தியை எடுத்துக் கொடுத்த போது, தஞ்சை விசயராகவலு நாயக்கர் தண்டியாது விட்டதும்;

இறுதியாக ஆண்ட திருவாங்கூர் மன்னர் இங்கிலாந்து சென்று மீண்டவுடன், அவரது பதுமநாபர் கோவிலுக்குத் தீவைத்த பிராமணப் பூசாரியைத் தீக்கரணியம் வினவியபோது, அது மன்னர்

மேனாடு சென்றதனாற் பொங்கிய தெய்வச்சினம் என்று

விடையிறுத்ததைக் கேட்டு, வாளாவிருந்ததாகச் சொல்லப்படுவதும்;

சென்ற ஆண்டு 'தென்மொழி' ஆசிரியர் பாவலர் பெருஞ்சித் திரனார், திருநெல்வேலித் திரவியம் தாயுமானவர் தென்மதக் கல்லூரித் திருவள்ளுவர் விழாவிற் சொற்பொழிவாற்றிய போது தடுத்ததும்; தமிழ திரவிடரின் நெஞ்சுரமின்மையைத் தெற்றெனத் தெரிவிக்கும்.

தமிழ்ப்பற்றின்மை: சில கட்சித் தலைவரும் பாவிசைப் பாளரும், கட்டாய இந்தியை ஏற்பதும் கோவில் தமிழ் வழிபாட்டைத் தடுப்பதும் தாய்மொழிப் பற்றின்மை யாலேயே.