உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150


இக் குற்றம் பேராயத்திற் சேர்ந்துள்ள தாழ்த்தப்பட்ட வகுப் பார்க்கோ பன்மடங்கு பெரிதாகும்.

ஆங்கில வரசு பல்கலைக்கழகக் கல்வி நிலையங்களில்தான், தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்க்கு இடந்தர முடிந்தது. மேல்வகுப் பார் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகளிலும், தொடக்கப் பள்ளி களிலும், கீழ் வகுப்பாரும் இடம்பெறச் செய்தது நயன்மைக் கட்சி யாட்சியே. அதன் பின்னரே, காந்தியடிகளின் முயற்சியால், பேராயமும் நயன்மைக் கட்சியைப் பின்பற்றியது. ஆயினும், குலங்களின் பிறவித் தொடர்பைக் காந்தியடிகள் நீக்க இயலவில்லை.

பேராயத் தமிழத் தலைவர் செய்த நன்மையெல்லாம், மனுதரும முறைப்படி பிள்ளைகள் பெற்றோர் தொழிலை மேற்கொள்ள வேண்டு மென்று ஆச்சாரியார் புகுத்த விருந்த தொடக்கக் கல்வித் திட்டத்தைத் திரு. காமராசர் தடுத்ததும்; திருவையாற்று அரசர் கல்லூரி விடுதியில், பிராமணன் சமைத்த வுண்டியைப் பிராமண மாணவர்க்குத் தனியிடத்திற் படைத்து வந்த வழக்கத்தை, தஞ்சை நாட்டாண்மைக் கழகத் தலைவர் நாடிமுத்துப்பிள்ளை நிறுத்தி யதுமே. இவை நயன்மைக் கட்சி யாட்சியிலும் நடந்திருக்கும் என்பதைச் சொல்லவேண்டுவதே யில்லை.

ஆங்கிலேயர் வந்திராவிடின், ஒரேயொரு வையாபுரி தவிர மற்றெல்லா அமைச்சரும் பிராமணரா யிருந்திருக்கக்கூடிய நிலைமை, இன்றில்லையே என்றெண்ணித்தான், அக் குலத்தார், நயன்மைக் கட்சியையும், அதன் கான்முளையாகிய தி.மு.க.வையும், காட்டிக் கொடுக்கும் கூட்ட வகையார் (Quisling variety) என்று பழிக்கின்றனர். இத்தகைய குற்றச்சாட்டு,நாட்டு மக்கள் வாயினின்று வரத்தக்கதே யன்றி, நாட்டைக் கெடுக்கும் வந்தேறிகள் வாயினின்று வரத்தக்க தன்று.

6

தி.மு.க. பொதுவுடைமைக் கொள்கையைப் படிப்படியாகத் தழுவுவதால்,பொதுவுடைமைக் கட்சி இனிப் பிரிந்து நிற்க வேண்டுவ

தில்லை.

தமிழ்நாடு இன்னும் விடுதலை பெறவில்லை

வெள்ளைக்காரனை விரட்டிவிட்டோ மென்றும், நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தோமென்றும், பேராயத்தார் நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்துவரினும், ஆங்கிலன் நீங்கிக் கால் நூற்றாண்டான பின்னும், தமிழ்நாடு விடுதலை பெறவில்லை.

சமற்கிருதத்திற்கும் தமிழுக்கும் இடைப்பட்ட நிலைமை, தாக்குவோனுக்கும் தற்காப்போனுக்கும் இடைப்பட்ட தொத்ததே. தமிழன் தாழ்வு பிராமணன் உயர்வு என்ற முறையிலேயே தமிழின்