உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154


ஆங்கினி தொழுகி னல்ல தோங்குபுகழ் மண்ணாள் செல்வ மெய்திய

நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே

99

என்று பாடி, அப் புலவனை உய்யக்கொண்டார்.

மூன்றாங் குலோத்துங்கச் சோழன் முரண்பட்ட போது, மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ

66

உன்னையறிந் தோதமிழை யோதினேன் - என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு

(புறம்.47)

என்று கம்பர் பாடிப் பிரிந்தார். எல்லா நாட்டிலும் புலவர் இப்படித் தானிருப்பர். அது “மண்டைக் கனம்” அன்று. புலவர் வறுமையைப் பயன்படுத்தி அவரை யடக்கியாளத் துணிவதுதான் செல்வனின் அல்லது அமைச்சனின் மண்டைக் கனம். சில வணிகர் புலவர் வணங்கிப் பணிவது போல் எல்லாரும் பணியார்.

முத்தமிழ்க் காவலர்

ன்று தமிழைக் காத்து வருபவர் மூவரே.

(1) தவத்திருக் குன்றக்குடி யடிகள்

அருள்நெறித் திருக்கூட்டம் அமைத்தும், கட்டாய இந்திக் கல்வியைக் கண்டித்தும்,தமிழ்நாடு முழுதும் இடைவிடாது அல்லும் பகலும் இனிய தமிழிற் சொற்பொழிவாற்றியும், ஆண்டுதோறும் பறம்புமலையிற் பாரிவிழா நடாத்திப் பாரி புகழைப் பரப்பிப் பல் புலவர்க்குச் சிறப்புச் செய்தும், திருக்கோவில்களில் தமிழ் வழிபாடு நடைபெறச் செய்தும், தமிழ்க் காப்பு நூல் வெளியீட்டிற்குப் பொருளுதவியும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்புப் பணியில் ஈடுபடுமாறு தமிழக அரசைத் தூண்டியும், தமிழரின் இருமை நலத்திற்கும் அருந்தொண்டாற்றி வருபவர், தமிழ்நாட்டுத் திருமடத் தலைவர் அனைவருள்ளும் தலைசிறந்த தவத்திருக் குன்றக்குடி அடிகள் ஆவர்.

(2) தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை

நீண்ட காலமாகக் கிடைக்காத நூல்கள் நேர்மையான விலைக் குக் கிடைக்குமாறும், விளங்காத செய்யுட் பனுவல்கள் எளிதாக விளங்குமாறும், ஆயிரத்திற்கு மேற்பட்ட அருந்தமிழ் நூல்களின் மூலத்தையும் உரையையும் ஆங்கில மொழிபெயர்ப்பையும், திண்ணிய வெண்டாளில் முத்துப்போன்ற எழுத்திற் செவ்வையாக அச்சிட்டு, கண்கவர் கவின் கட்டடங் கட்டி, உலக முழுதும் பரப்பித்