உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


வடஇந்தியாவில் முதற்கண் குடியேறியவர் தமிழர் வழியினரான திரவிடரே யாதலால், வடஇந்தியமொழி வடதிரவிடம் எனப்படும். வடுகிற் கடுத்த திரிமொழி வடதிரவிடமே.

வடதிரவிடருள் ஒருசாரார் வடமேற்காகச் சென்று ஐரோப் பாவின் வடமேலைப் பகுதியை (செருமானியக் காண்டினேவியத்தை) அடைந்ததனால், அவ்விடத்துத் தோன்றிய தியூத்தானியம் (செருமானியம்), ஆரியக் கிளைகள் எல்லாவற்றுள்ளும் தமிழுக்கு மிக நெருக்கமாக வுள்ளது.அதன் தெற்கிலுள்ள இலத்தீனம் அதினுஞ்சற்றுத்திரிந்தும், தென்கிழக்கிலுள்ள கிரேக்கம் இலத்தீனினுஞ் சற்றுத் திரிந்தும், கிரேக்கத்திற்குக் கிழக்கில் நெடுந்தொலைவு வந்த கீழை யாரியம் இலத்தீன கிரேக்கத்தினும் மிகத் திரிந்தும் உள்ளமை தமிழாரி யத் திரிபு வளர்ச்சிப்பாதை வளைவைத் தெளிவாகக் காட்டும்.

தியூத்தானியத்திற்கும் தமிழுக்கும் உள்ள நெருக்கம் (1) சொல்லொப்புமை

கத்தொலிகள்: கூ - கூவு-Coo, கரை - cry, crow,ஊள் (வி.) - howl, ஊளை (பெ.) - howl, கனை - neigh, பிளிறு - blare, உரறு- roar, மிர் - hum, hum, கலி - call.

-

விளிகள்: ஏ, ஏய் - hey, ஒ - 0, oh, ஓய் - hoy, hey, ஒ - o, oh, ஓய் - hoy, எல்ல - எல்லா hallo. குறிப்பொலிகள்: ஆ (வருத்தம்) - ah, ஆகா (வியப்பு) - aha, ஏ (வினா)-eh, (உ)ம் (தயக்கம், வெறுப்பு)-hum, சீ-சே, சை-shaw, pshaw.

ஆண்டு yond,

சுட்டுச்சொற்கள் : ஆன் (அங்கு) – yon, அதோள்-thider, இதோள்-hider, எதோள்-whider, இதா, இதோ-

lo.

இளமைப்பெயர்கள்:

பையன் - ME. boi, E. boy, சிறுக்கன்- சிக்கன்-OE. cicen, E. chicken, குழந்தை-OE. cild, E. child, குட்டி-kid, kiddy, குரு-கரு-LG. gor (child), குருளை-ME. gurle, E. girl, சிட்டு-chit.

முறைப்பெயர்கள் : அம்மை - அம்மா -mamma, ma, அப்பன்- அப்பா-papa, pa, தா (தந்தை)-da, தாதா-தாத்தா, தாதை- daddy, dad, மகன்-Gael. magus(son), E. mac.

அஃறிணை யுயிரிப் பெயர்கள்: உதள் (ஆட்டுக்கடா)-OHG. widar, E. wether, புல்லம்-bull, பூசை-pussy, கொத்தி-cat, ஏழகம்- elke, elk, மறி-mare, குருகு-crane, நாகம்-OE. snaca, E. snake, களவன் (நண்டு)-கடப்பான் OE. crabba, E. crab, சுறவு-shark.