உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169


கட்டுரைக்குழுவில், இறுதியில் என் பெயரைச் சேர்த்துக்கொண்டார். எனக்குரிய குழு ‘மொழிநூல்'. அதற்குத் தலைவராயிருந்தவர் வங்கப் பிராமணரான பர். சட்டர்சி.

தமிழ் வல்லுயிருள்ள வழங்குமொழி யாதலால், உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு, மறைமலையடிகள் இல்லாத காலத்தில் அவர்கள் வழிப்பட்ட ஒரு மொழிநூலறிஞரான தமிழ்ப் புலவர் தலைமையில். தமிழருள்ள நாட்டில் தமிழிலேயே நடைபெறல் வேண்டும். அகப் பகைவரும் புறப்பகைவரும் அறவே விலக்கப்படல் வேண்டும். கட்டுரைகளெல்லாம் தமிழிலேயே படிக்கப்படல் வேண்டும். தமிழிற் பேசவோ எழுதவோ படிக்கவோ ஆற்றலில்லார் பார்வையாளராக மட்டும் இருத்தல் வேண்டும். கருத்தரங்கு மாநாட்டு மண்டபத்திற் கருகில் அமைக்கப்படும் மாபெரும் பந்தற் கீழ், பொதுமக்கள் அமர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளையும் கட்டுரை களையும் உரத்தொலிப்பான்கள் (Loud speakers) வாயிலாகக் கேட்டறிதல்வேண்டும். மாநாடு முடிந்த பின், அதன் நடபடி(க்கை) கள் ஆங்கில அறிக்கை வாயிலாக அயல்நாட்டார்க்கு அறிவிக்கப் படல் வேண்டும். இம் முறையில் எம் மாநாடும் நடைபெறவில்லை.

சென்னைக் கருத்தரங்கு மாநாட்டில் தமிழ்க் கட்டுரை படிப்போர்க்கு வழிகாட்டியாக விடுக்கப்பட்ட, ‘ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான விளக்கக் குறிப்புகள்' என்னும் அறிவிப்பில்,

"யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்கிற தமிழ் மூதுரையில் பொருத்தமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள ஒன்றே உலகம் என்னும் நம் வாழ்வு முறையின் உயர்வு நவிற்சியற்ற காட்சியை வழங்குவதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.

...கல்தோன்றி மண்தோன்றாக்

காலத்து முன்தோன்றிய பழங்குடி

என்பது போன்ற தக்க ஆதாரமில்லாத தற்பெருமையான கூற்றுகள், எதையும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும் நம்முடைய தகுதியிலும் திறமையிலும் அவநம்பிக்கைதான் ஏற்படச் செய்யும்” என்றுள்ளது. இஃதொன்றே, திருத் தனிநாயகம் உலகத் தமிழ்ப் பேரவை, வையாபுரிகள் கூட்டம் என்பதைக் காட்டப் போதிய சான்றாம்.

உலகத் தமிழ்ப் பேரவைத் தலைவரான, தமிழறியாத பேரா. பில்லியோசா, பண்டைநாளில் சமற்கிருதமே இந்தியப் பொது மொழியா யிருந்த தென்றார். ஆரிய வழியினரான திரு. ஐராவதம் மகாதேவன் தமிழெழுத்தைப் பிராமியெழுத்தோடு தொடர்பு படுத்தி, தமிழெழுத்தும் தொல்காப்பியமும் கி.மு. நூற்றாண்டில் தோன்றின என்றார். கொச்சைத் தமிழ் நச்சியாரான

2ஆம்