உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172


நண்ணிலக்கடற்கரை நாடுகளினின்று வந்தேறிகள் என்னும் தவறான கொள்கையினரே.

ஒரு நாட்டு இலக்கியத்தை அயலார் கற்று அதில் தேர்ச்சி பெறலாம். ஆயின், அதன் மொழியை, அதைத் தாய்மொழியாகக் காண்டவரொடு பிள்ளைப் பருவத்தினின்று நெருங்கிப் பழகினா லொழிய, ஒரே தலைமுறையில் அவர்போல் முற்றக் கற்க முடியாது.

ஓய்வு பெற்ற சமற்கிருதப் பேராசிரியரான பரோவும் (T. Burrow) எமெனோவும் (M. B. Emeneau) தொகுத்துள்ள திரவிட அகரமுதலி, 'திரவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலி' (A Dravidian Etymological Diction- ary) என்று பெயர் பெற்றிருப்பினும், உண்மையில் ஓர் ஒப்பியல் அகரமுதலியே (A Comparative Lexicon).

கால்டுவெலார் கருத்திற் கிணங்கத் தமிழை ஆழ்ந்து கற்றுத் திரவிடமொழிகளைக் கொடிவழி முறைப்படி (Geneological method) ஆராயாது, இற்றை வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics) போல் ஒப்பியல் முறைப்படி (Comparative method) மட்டும் நோக்கி, தமிழிலுள்ள தவறான சென்னைப் பல்கலைக் கழக அகர முதலியையும், தமிழைத் தாய்மொழியாகப் பயன்படுத்திக்கொண்டே அதை இயல்பாக வெறுக்கும் பிராமணக் குலத்தைச் சேர்ந்த, (P.S.) சுப்பிரமணிய சாத்திரியார் எழுதிய தொல்காப்பிய எழுத்ததிகார சொல்லதிகாரக் குறிப்புரைகளையும், அளவை நூல்களல்லாத பிறவற்றையும், தமிழறியாதவர் தொகுத்த திரவிட தொகுத்த திரவிட மொழி யகரமுதலிகளையுமே, அடிப்படையாகக் கொண்டு தொகுத்ததனால், அவர் அகரமுதலி பின்வருமாறு பல பிழைபாடுகள் மலிந்துள்ளன.

L

(1) தமிழ் குமரிநாட்டில் தோன்றிய தென்னும் அடிப்படை யுண்மையை அறியாமை.

(2)

(3)

(4)

சமற்கிருதம் முந்தியதென்றும் அதனால் தமிழ் வளம் படுத்தப் பட்டதென்றும் ஒரு முற்கோள் (prejudice)

உடைமை.

அங்கணம் (anganam) என்பதை ankanam என்றும், அஞ்சு (anju) என்பதை ancu என்றும், அண்டி (andi) என்பதை anti என்றும், அந்தணன் (andanan) என்பதை antanam என்றும், அம்பு (ambu) என்பதை ampu என்றும், தவறாக ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்த்துள்ளமை.

பல தென்சொற்களை ஆரியமாக அல்லது சமற்கிருத மாகக் காட்டியுள்ளமை.