12
விரைந்து மறந்துவிட்டனர்.வடநாட்டிலிருந்த தமிழரொடும் திரவிட ரொடும் போட்டியிட்டுப் பழந்தமிழ் மந்திரங்கள்போல் பாடத் தொடங்கிய, ஆரியப் பூசாரிகளின் வான்கோழியாட்டுப் போன்ற பாட்டுகளும்,தென்றமிழ்ச்சொல்லும் வடதிரவிடச்சொல்லும் மிக்கு
எகர ஒகரமின்றி, பிராருகிதம் என்னும் முன் வடமொழியிலேயே உள்ளன.
மந்திரம் என்னும் சொல்லும், வேதப் பிரிவின் பெயரான மண்டலம் என்னும் சொல்லும், தூய தென்சொற்களே. வேதம் என்னும் சொல்லும், வேதத்தின் மறுபெயரான சுருதி யென்னும் சொல்லும், தென் சொற்களின் திரிபுகளே. மண்டலம் என்னும்
சொல்வரலாறு முன்னரே கூறப்பட்டது.
முன்னுதல் = கருதுதல். முன் - மன். மன்னுதல் = கருதுதல். திரம்(திறம்) என்பது ஓர் ஈறு. உள்ளத்தின் தூய்மையும் வலிமையும் உள்ளவர், தாம் கருதியது தப்பாது நிறைவேறுமென்று எண்ணி, வாய்விட்டோ வாய்க்குள்ளோ சொல்வதே மந்திரமாம். மன்னும் திறம் அல்லது எண்ணும் வலிமை மந்திரம் (மன் + திரம்).
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்.
(குறள்.666)
கீளுடை (லங்கோடு) அல்லது நீர்ச்சீலை(கோவணம்) போலும் எளிய வுடையன்றி வேறு புறக்கோலம் கொள்ளாது, உள்ளத்துறவு பூண்டு இருவகைப் பற்றையும் அறவே யறுத்து, இறைவனொடு இரண்டறக் கலந்தாற்போல் அவனைப்பற்றிய ஊழ்கத்தில் (தியானத்தில்) ஆழ்ந்து ஈடுபட்ட பேரறிஞர், தாம் உண்மையென்று உணர்ந்தவற்றை வெளியிடுஞ் செய்யுள்களும் மந்திரம் அல்லது வாய்மொழி யெனப்படும்.
66
66
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப.
99
பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே”
(தொல்.1434)
(தொல்.1336)
திருமூலர் திருமந்திரமும் நம்மாழ்வார் திருவாய்மொழியும் இத்தகையன. தப்பாது நிறைவேறும் மெய்ம்மொழி யென்னுங் கருத்தில், மந்திரம் வாய்மொழி யெனப்பட்டது.
விழித்தல் கண்திறத்தல், காணுதல், அறிதல். விழி அறிவு. “தேறார் விழியிலா மாந்தர்” (திருமந்.177.). விழி-L vide-Skt. வித்- வேத = அறிவு, மறை.
செவியுறு-வ.ச்ரு-ச்ருதி=கேள்வி, (எழுத்தின்மையாற் பார்க் கப்படாது) கேட்கப்படும் ஆரிய மறை.