14
முதல் தொண்டுள் ளும் (ஒன்பதுள்ளும்) நாற்குலப் பகுப்பைப்பற்றிய குறிப்பேயில்லை யென்று சொல்லப்படுகின்றது. பத்தாம் மண்டலத் திலுள்ள புருட சூத்தம் (புருஷ ஸூக்த) என்னும் குழறுபடை மந்திரப் போலியும், பிற்காலத்துச் சேர்க்கப்பட்ட இடைச்செருகலே. இது 'தமிழர் மதம்' என்னும் நூலில் விளக்கப்படும்.
பூசாரிகளல்லாத ஆரிய வந்தேறிகள் பழங்குடி மக்களொடு கலந்து போனதனால், அவர்களொடு கலவாத ஆரியப் பூசாரிகள் நாட்டுமக்களை யடுத்தே பிழைக்க வேண்டி யிருந்தது. சிவநெறி யாரும் நாகரிக மக்களும் பொதுமக்களிடை யிருந்ததனால், அவர் களாற் புறக்கணிக்கப்பட்ட ஆரியப் பூசாரிகள், அரசரை வயப் படுத்தச் சூழ்ச்சி செய்து சில வழிகளை வகுத்தனர். அவற்றுள் ஒன்று வேள்வி வளர்த்தல்.
தெய்வத்தின் பெயரால் என்ன சொன்னாலும் நம்புவதும் எதைக் கேட்டாலும் கொடுப்பதும் ஆகிய மதப்பித்தம், பழங்குடி மக்களின் சிறப்பியல் பென்பது கண்டு, அரசரிடம் சென்று,தாங்கள் தேவர் வழிவந்த நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தங்கள் மொழி தேவமொழி யென்றும் தாங்கள் வகுத்த வேள்விகளைச் செய்தால் அரசர்க்கு வெற்றியும் குடிகட்கு நன்மையும் நாட்டிற்குச் செழிப்பும் உண்டாகு மென்றும், சொல்லி ஏமாற்றினர். இவ் வேமாற்றிற்கு, அவர்களின் வெண்ணிறமும், உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கும் ஒலிகள் மிக்க அவர்களின் மந்திரமொழியும் பெரிதும் துணை செய்தன. அடியைச் சாய்த்தால் மரஞ்சாய்வதுபோல் அரசனை வயப் படுத்தி னால் குடிகள் தாமாக வயப்படுவர் என்று அவர்கள் கருதியது நிறைவேறிற்று.விசுவாமித்திரர் போன்ற அரசர் சிலர் வயப்பட்டனர்.
வேள்வி செய்யவேண்டிய முறையைப்பற்றிப் பெரும்பாலும் உரைநடையில் இருக்கு மந்திரங்களை எடுத்துக் கூறி, அவற்றிற்கு எசுர்(யஜுர்) வேதத் தொகுப்பென்றும்; வேள்வியிற் பாடற் கேற்றவாறு பல இருக்கு மந்திரங்கட்கு இசையமைத்து, அவற்றின் திரட்டிற்குச் சாமவேதத் தொகுப்பென்றும் பெயரிட்டனர்.இதனால், முன்னர் ஒரே வேதமாயிருந்தது மூவேதம் (த்ரயீ) ஆயிற்று.
வேள்வியில் மந்திரம் கூறித் தெய்வங்களை அழைப்பவன் ‘ஹோதா' என்றும்,தீவளர்ப்பவன் ‘அத்வர்யு' என்றும், சைவகுத்த மந்திரங்களைப் பாடுபவன் 'உத்காதா' என்றும் பெயர் பெற்றனர். வேள்வியின் பெருமைக்குத் தக்கவாறு, இம் முப்பணியர் தொகையும் மிகும்.
வேளிரும் மன்னரும் வேந்தரும் போன்று மூவகை யரசர் செல்வநிலைக்கும் ஏற்றவாறு, சிலபல நாள்களில் முடிவனவும் சிலபல மாதங்களில் முடிவனவும் சிலபல ஆண்டுகளில் முடிவனவுமான