17
அது புகாரில் நாளங்காடியில் நின்று நாள்தொறும் படையலுண்டு வந்தது.
க் கதையே சிலப்பதிகாரத்தில்,
66
கடுவிசை யவுணர் கணங்கொண் டீண்டிக் கொடுவரி யூக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொலைந்தன ராகி நெஞ்சிருள் கூர நிகர்த்துமேல் விட்ட
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் திருந்துவேல் அண்ணற்குத் தேவன் ஏவ இருந்துபலி யுண்ணும் இடனும்”
என்று கூறப்பட்டுள்ளது.
(சிலப்.6:7-13)
சீன நாட்டிற்கு வானவர் நாடு என்றொரு பெயருண்டு. அந் நாடு பூதக் கதைகட்குப் பெயர் போன தென்பது அலாடின் கதையால் அறியப்படும்.
முசுகுந்தன் சீனநாட்டரசன் ஒருவனொடு நட்புக் கொண் டிருந்து, அவன் நகருக்குச் சென்றிருக்கலாம். அன்று கலுழவேகன் என்பானொருவன் அமிர்தபதி என்பா ளொருத்தியைக் கவர்ந்து சென்றிருக்கலாம். சீனவரசன் முசுகுந்தனைத்தன் நகரைக்காக்குமாறு இருத்திவிட்டு அமிர்தபதியை மீட்கச் சென்றபின், ஊணர் (Huns ஹூணர்) என்னும் நடு ஆசியவாணர் சீனத் தலைநகரைத் தாக்கி முசு குந்தனால் முறிடிக்கப்பட்டிருக்கலாம். சீன அரசன் தனக்குத் துணை யென்று கொண்டிருந்த பூதப்படிமையைப் புகாருக்கு அனுப்பி யிருக்கலாம்.
புலவர் குழந்தையார் முசுகுந்தனை முதுகாந்தன் என்பர்.
முசுப்போற் குந்தியிருப்பவன் என்னும் பொருள் கொண்ட தாயின், முசுகுந்தன் என்பது தூய தென்சொல்லே.முற்பிறப்பில் முசுக் கலையா யிருந்தான் என்னுங் கதை இக்காலத்திற் கொள்ளத்தக்க தன்று.
சிபி என்பவன், புறாவைத் துரத்திய பருந்திற்குத் தன் தசையை அறுத்துக் கொடுத்த செம்பி அல்லது செம்பியன் என்னும் சோழனே. அவன் பெயர் வடமொழியிற் சிபி எனத்திரிந்துள்ளது.இதையறியாத (அல்லது அறிந்தே ஏமாற்றுகின்ற) வடமொழிப் புலவர், சோழர் சிபி என்னும் வடநாட்டு ஆரிய வரசனின் வழியினராகக் கூறி மகிழ்வர்.
இராமன் காலத்தவனான பரசுராமன், கார்த்தவீரியார்ச்சுனன் மக்கள் எய்த இருபத்தோரம்பு பட்டு இருபத்தொரு முறை தன் மார்பில் அடித்துக்கொண்டிறந்த, தன் தாயைக் கொன்றதற்குப்