உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


ப்

உரிமை வேண்டும் நயன்மைக் கட்சித் தமிழரைப் பகைத்து வென்றதையும் இன்றும் எதிர்ப்பதையும் நோக்குமிடத்து, வடநாட்டுப் பழங்குடி மக்கள் ஆரியப் பூசாரிகட்கு அடங்கிப் போனது ஒருசிறிதும் வியப்பன்று. தமிழரைக் கொண்டே தமிழரை அடக்கி யொடுக்கி வருவது போல், நாட்டுமக்களைக் கொண்டே நாட்டுமக்களை வென்றிருக்கின்றனர் வடக்கிலும்.

ஆரியப் பூசாரிகள் சிந்துவெளியினின்று கங்கைவெளிக்கு வந்தபின், வேத மந்திரங்களின் பொருளை விளக்கும் பிராமணம் என்னும் உரைநடை நூல்கள் எழுந்தன. பல் வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதியும் அரசவேள்வி (ராஜூஸூய) வேட்ட பெருநற்கிள்ளியும் பல்யானைச் செல்குழு குட்டுவனும் போன்ற அரசரைத் தமிழகத்தில் துணைக்கொண்டது போன்றே, விதேக நாட்டு மாதவன் போன்ற அரசரை வடநாட்டில் துணைக்கொண்டு ஆரிய வேள்வி மதத்தைப் பரப்பியிருக்கின்றனர் என்பது, சதபத பிராமணத்தால் தெரியவருகின்றது (1,4:1:10).

வேள்வி எல்லாம் வல்லதும் அளவிலா ஆற்றலுடையது மாகுமென்றும், வேள்வி யாசிரியனே மக்களுட் பெரியவ னென்றும், அவன் வேள்வி வளர்ப்பதனாலேயே மழை பெய்து பயிர் விளைந்து ஆ சுரந்து உலகம் நடைபெறுகிறதென்றும் கருத்துகள் பரப்பப் பட்டன. ஆரியப் பூசாரி பெரியவன் என்னும் கருத்தில் பிரமன் (Brahman) எனப்பட்டான். பிரமன் = பிராமணன்.

“பிரமன் முதல் நால்வருணத்து

பிரமகத்தி

=

99

பிராமணக் கொலை.

"பிரம கத்தியி னீங்கிப் பிறங்குவான்

பிரம காதகன்

=

99

(திருவானைக். கோச்செங். 69)

(சேதுபு. தனுக். 57)

பிராமணனைக் கொன்றவன்.

பிராமணர் நாடோறும் ஓதும் மந்திரம்.

பிரம காயத்திரி

பிரம குலம்

பிரம சர்ப்பம் பிரம சூத்திரம் பிரம தாயம் பிரம தீர்த்தம்

பிரம தேயம்

=

பிராமண வகுப்பு.

பிராமணப் பாம்பு.

=

பூணூல் (பிராமணன் அணிவது).

பிராமணர்க்கு விடப்பட்ட இறையிலி நிலம். நீரில் தருப்பையைத் தோய்த்து

உ ம்பில் தடவுகை.

= பிராமணர்க்குத் தானமாகக்

பிரம மாராயன்,

=

கொடுக்கப்பட்ட ஊர்.

பிராமண அமைச்சன் பட்டப்பெயர்.

பிரம ராயன்

பிரம முடி(முடிச்சு)

=

பிராமணரின் பூணூலிலுள்ள

ஒருவகை முடிச்சு

பிரம முனி(CS) = பிராமண முனிவன்.