உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மதுரையமைப்பு

(தோரா. கி.மு. 5ஆம் நூற்றாண்டு)

ப்

இரண்டாங் கடல்கோட்குப் பின், நீண்ட காலமாகக் கொற்கை யிலும் மணவூரிலும் பாண்டியரிருந் தாண்டுவந்தனர். அதன் பின், வைகைக் கரையில் இருந்த கடம்பவனம் என்னும் கடப்பங்காடு அழிக்கப்பட்டு இற்றை மதுரை கட்டப்பட்டது. பஃறுளிக்கரைமே லிருந்த பாண்டியன் முதல் தலைநகர்ப் பெயரே இதற்கும் இடப் பட்டதனால், அப் பெயர்க் கரணியமே இப் பெயர்க்குமாம். அக்கால வழக்கிற் கேற்ப, மதுரையைச் சுற்றி நாற்புறமும், பல்வேறு போர்ப் பொறிகளைப் பொருத்தற்கும் நொச்சி மறவர் நின்று போர் செய்தற்கும் ஏற்றவாறு, அகன்றுயர்ந்த கோட்டைமதில் எழுப்பப் பட்டது. நாற்புறமும் கோட்டைவாயிலும் வாயிலும் வாயில்தொறும் மேன்மாடமும் அமைந்தன. மதின்மேல் இடையிடை காவற் கோபுரங்களும் கட்டப்பட்டன. வாயின்மாடச் சிறப்பினால் மதுரை மாடமதுரை யெனப்பட்ட

66

மாட மதுரையும்

66 மாடமதுரை

99

66

நான்மாட மதுரை

99

து.

(சிலப்.பதி.20,8:3,9:76,15:112)

(புறம்.32:5)

(திருவால. திருவிளை.20:1).

கடைக்கழகத் தொடக்கம் (கி.மு. 5ஆம் நூற்றாண்டு)

மதுரை மாநகர் அமைக்கப்பட்டவுடன், மூன்றாம் புலவர் கழகமும் தோற்றுவிக்கப்பட்டது. நாற்பத்தொன்பதின்மர் உறுப் பினராயினர். முக்கழகத்திலும் உறுப்பினர் தொகைக்கு வரையறை இல்லை. அவ்வக் காலத்தில் தலையாய புலவர் அல்லது சிறந்த புலவர் எத்தனைவரோ அத்தனைவரும் இடம்பெற்றனர்.புதிதாகயாரேனும் சிறந்த புலவர் வரினும் சேர்க்கப்பட்டனர். இதனையே, தகுந்த புலவர் வரின் கழகப்பலகை தானே ஒரு முழம் நீண்டு இடந்தரும் என்னும் மரபுரை குறிக்கும்.நாற்பத்தொன்பது என்னுந் தொகை ஏழேழென்று வகுக்கப்படுவதால், மொழிப்பற்றும் மூப்பும் புலமைத்திறமும் நோக்காது, மதம்பற்றியோ குலம்பற்றியோ நிலம்பற்றியோ ஏழெழுவர் தொகுக்கப்பட்டனர் எனக் கருதற்க. எத்தனைவர் வரினும் ஏற்றுப் போற்றற் கேற்ற செல்வம் பாண்டியனிடத் திருந்தது. முக்கழகத்திலும் புலவர் தொகையை ஒன்பதென்னும் எண்ணில் முடித்தது, ஓரிடத்தை இறைவனுக்கு ஒதுக்கவேண்டு மென்னுங் கொள்கை பற்றியே.