உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

சில இடப்பெயர்களைச் சற்றே திரித்து வடசொல்லாக்கினர்.

எ-டு:

தென்சொல்

குமரி

வடசொல்

குமாரீ

கன்னி

மதுரை

காஞ்சிபுரம்

வாரணன்

வடசொல் வழக்கு

கன்யா

மதுரா

காஞ்சீபுர

வருண

ஆயிரக்கணக்கான தென்சொற்கள்

இறந்துபட்டுள்ள

இக்காலத்தும் அயன்மொழித் துணையின்றித் தமிழைத் தூய்மையாக எழுதலாம். தொல்காப்பியர் காலத்தில் தமிழ்ச் செய்யுட்கு வடசொல் வேண்டியதே யில்லை. ஆயினும், வேதத்திலும் இதிகாச புராணங் களிலும் நூற்றுக்கணக்கான தென்சொற்க ளிருப்பதனாலும், அக் காலத்தில் வரலாற்றையும் மாந்தனூலையும் துணைக்கொண்ட மொழியாராய்ச்சி யின்மையாலும், வடமொழி யிலுள்ள தென் சொற்களை யெல்லாம் வடசொல் என்றே கருதின தனாலும், வடமொழி தேவமொழியாதலால் ஒரு மொழியினின்றும் கடன் கொள்ளா தென்னும் தவறான கருத்துப் புகுத்தப்பட்ட தனாலும், வடமொழி வெறியரான பிராமணர் ஒருசில வேண்டா வடசொற்களைத் தமிழிற் புதிதாகப் புகுத்தினதனாலும்,

66

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

(தொல்.884)

66

99

(தொல். 885)

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் என்று தொல்காப்பியர் கூறிவிட்டார். ஆயினும், கூடலூர்கிழார் வடக்கு கிழக்கு என்னும் அருமையான உலகவழக்குச் சொற்கள் இருக்கவும் அவற்றிற்குத் தலைமாறாக (பதிலாக), உதீசி பிராசி என்னும் வடசொற்களின் திரிபான ஊசி பாசி என்னும் சிதைவுகளை, 229ஆம் புறப்பாட்டில் ஆண்டிருப்பது, அவரது பேதைமையையே காட்டும்.

இலக்கியத் துறை

வீட்டின்பம் அளிக்கும் இறைவனைச் சிவன் அல்லது திருமால் என்னும் பெயரில் வணங்கிவந்ததனால், தமிழரே அறம்பொரு ளின்பம் வீடென்னும் நாற்பொருளை வகுத்தவ ராவர். சிறு தெய்வங்கட்குக் காவு கொடுத்து வேள்வி வளர்க்கும் ஆரியர்க்கு, விண்ணுலகப் பேறேயன்றி வீடுபே றில்லை.