உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

கட்டிநிற் போனுங் கலையுருவி னோனும்

அன்னோ னிறைவ னாகுமென் றுரைத்தனன்

85

99

(27:89-95)

என்னும் மணிமேகலை யடிகளால் அறியக் கிடக்கின்றது. ஆகவே, 6ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருமந்திரம் முற்றும் ஆரியவண்ணமானதில் வியப்பொன்று மில்லை.

"சிவமாம் பரத்தினிற் சக்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே". "பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம் மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரம் துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே ". 'ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு

மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்

வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன் றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே”.

(திருமந். பாயி. 72)

(திருமந்.பாயி.73)

(திருமந்.பாயி. 74)

இவற்றால், முதற்கண் ஒன்பதாகவிருந்து பின்னர், இருபத் தெட்ட டாகப் பெருகிய ஆரிய ஆகமங்களே, திருமந்திரத்திற்கு மூல மென்பது பெறப்படும்.

"வேகத்தை விட்ட அறமில்லை

66

99

இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே

99

(61)

(63)

(944)

"ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்

99

இவையும் இவைபோன்ற பிற கூற்றுகளும், ஆரிய மறையையும் (வேதமொழியும் சமற்கிருதமுமாகிய) ஆரிய மொழியையும் முதன்மையாகக் கொண்டது திருமந்திரம் என்பதைக் காட்டும்.

ஆயினும், எல்லா நாட்டாரும் எல்லா மதத்தாரும் மகிழ்ந்து போற்றத்தக்க பல அருந்திருமந்திரங்கள் இதிலுள் ளன. அவற்றுள் ஐந்து வருமாறு:

1. "அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

(257)