உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

தமிழ் இலக்கிய வரலாறு

செல்வது தாண்டகம். திருநாவுக்கரசர் தாண்டகங்களுள் மாபெரும்பாலன மண்டில எழுத்தளவே கொண்டிருப்பதால்,

"மூவிரண் டேனும் இருநான் கேனும் சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர் கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள் அறுசீர் குறியது நெடியதெண் சீராம்

99

என்னும் பன்னிரு பாட்டியல் நூற்பாவால் அமைக்கப்படும்.

திருநாவுக்கரசர் தேவாரங்களுள்,

(195)

திருக்குறுந்தொகை

யென்பன கலிமண்டிலமாகவும், திருநேரிசை யென்பன அறுசீர்க் கழிநெடிலாசிரிய மண்டிலமாகவும், திருவிருத்த மென்பன கட்டளைக் கலித்துறையாகவும், அமைந்திருப்பது கவனிக்கத் தக்கது. இன்றுள்ள தேவாரப் பாடல்களில் ஆளப் பட்டுள்ள அல்லது பெயர் குறிக்கப்பட்டுள்ள பண்கள் 24. பண் குறிக்கப்படாத தேவாரப் பண்களும், சிதலரிக்கப்பட்ட தேவாரப் பண்களும், எவையென்றும் எத்தனை யென்றும் அறியோம்.

பத்தாம் நூற்றாண்டில் தேவாரப் தேவாரப் பதிகங்கள் சிவன் கோயில்களிற் பாடப்படும் வழக்கற்றிருந்ததனாலும்; முதலாம் அரசவரசன் (இராஜராஜன்) சிதலரிப்பினின்று மீட்ட தேவாரப் பதிகங்கட்கு இசைவகுக்க அமர்த்தின இசைஞானி யார், அப் பதிகங்கள் பாடப்பட்ட பண்ணறியாது புதிதாக வேறு

பண்களையே வகுத்ததனாலும், அப் பண்களுள்ளும், சிலவற்றை ஓதுவார் சிலர் மாற்றிவிட்டதாகத் தெரிவதனாலும், இற்றை வழக்கைக்கொண்டு தேவாரப் பண்ணாராய்ச்சி செய்வது ஓரளவு வானத்து மீனுக்கு வன்றூண்டிலிடும் கதையேயாகும்.

இதுபோதுள்ள பண்டை இசைத்தமிழிலக்கியத்துள் தலை சிறந்தது தேவாரத் திரட்டே. சம்பந்தர் தேவாரம் மூன்றும் அப்பர் தேவாரம் மூன்றும் சுந்தரமூர்த்தியார் தேவாரம் ஒன்றும் ஆக மூவர் தேவாரமும் 7 திருமுறைகளாக வகுக்கப் பட்டுள்ளன. இவ் வேழுஞ் சேர்ந்தது அடங்கன்முறை யெனப்படும். இதுவே பன்னிரு திருமுறைத் தொகுதியின் தொடக்கம்.

தேவாரம் என்பது, இறைவனைப்பற்றிய இசைப்பாடல் என்று பொருள்படும். தே = தேவன். வாரம் = சொல்லொழுக்க மும் சை யொழுக்கமுமுள்ள பாடல். தேவாரம் பொதுவான கீர்த்தனை போலாது, செந்தமிழ்ப்பாவும் பாவினமுமாக விருப்பது