உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

தமிழ் இலக்கிய வரலாறு


"திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப

செய்யபரி பாடற் றிறம்

99

என்னும் வெண்பாவினால், பழைய எழுபது பரிபாடல்களுள் எட்டு திருமாலுக்குரியன என்பது அறியப்படும்.

நான்காம்

ன்றுள்ள 22 பரிபாடல் தொகையில், ஆறு (1, 2, 3, 4, 13, 15) திருமாலுக்குரியன. அவற்றுள் முதலது கடவுள் வாழ்த்து, அதைப் பாடினார் பெயர் தெரியவில்லை. இரண்டாம் பாடல் கீரந்தை யாராலும், மூன்றாம் பாடல்கள் கடுவனிள வெயினனாராலும், பதின்மூன்றாம் பாடல் நல்லெழுநியா ராலும், பதினைந்தாம் பாடல் இளம்பெருவழுதியாராலும் பாடப்பட்டன. பரிபாடல் பரிபாட்டென்றும் வழங்கும்.

முதலாம் பெருந்தேவனார் பாரதம்

இது, கடைக்கழகக் காலத்தில் தொண்டைநாட்டிற் பிறந்து வாழ்ந்த பெருந்தேவனாரால், உரையிடையிட்ட பன்னீராயிரம் பாவிசை (Stanzas) கொண்டதாகப் பாடப்பட்ட பனுவல்.

"சீருறும் பாடல்பன் னீரா யிரமுஞ் செழுந்தமிழ்க்கு வீரர்தஞ் சங்கப் பலகையி லேற்றிய வித்தகனார்

பாரதம் பாடிய பெருந்தேவர் வாழும் பழம்பதிகாண் மாருதம் பூவின் மணம்வீ சிடுந்தொண்டை மண்டலமே

99

என்னுந் தொண்டைமண்டல சதகச் செய்யுள் காண்க. இப் பனுவல் பின்னர் இறந்துபட்டது. இதன் செய்யுள்கள் சில, தொல் காப்பியப் பொருளதிகார நச்சினார்க்கினியருரையிலும் யாப்பருங் கல விருத்தியிலும் மேற்கோளாகக் காட்டப்பட் டுள்ளன. நாலாயிரத் தெய்வப் பனுவல் (நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்)

சிவனிய இலக்கியத்திலுள்ள தேவாரத்திற்கு ஒப்பாக மாலிய இலக்கியத்திலுள்ளது, நாலாயிரத் தெய்வப் பனுவல். இது 6ஆம் 7ஆம் 8ஆம் 9ஆம் நூற்றாண்டுகளில், முதலாழ்வார் முதல் திருமங்கையாழ்வார்வரை பன்னிரு தலைசிறந்த திருமாலடியாராற் பாடப்பெற்ற திருமால் வழுத்துத் திரட்டு. வேதாந்த தேசிகரின் பிரபந்தசாரம்,

"வையகமெண் பொய்கை பூதம் பேயாழ்வார் மழீசையர் கோன்