உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

127


3. முடிவின்றியும் நிறைவுண்மை

4. ஆசிரியன் விருப்பின்மை

5. வறுமை

6. நோய்த்தடை

7. பிறர்தடை

8. வாழ்நாட்குறுக்கம்


கம்பர்

உத்தரகாண்டம்

பாடாமைக்கு,

முடிவின்

அமங்கலத்தன்மையும்

முடிவின்றியும்

நிறைவுண்மையுமே

கரணியமாகும்.

தற்சிறப்புப் பாயிரத்தில்,

"தேவ பாடையின் இக்கதை செய்தவர் மூவ ரானவர் தம்முளு முந்திய

நாவி னான்உரை யின்படி நான்தமிழ்ப் பாவி னாலிது ணர்த்திய பண்பரோ

என்று கம்பர் பாடுகிறார். அவர் குறித்த மூவரையும் அவருள் முதல்வரையும்பற்றி, திரு. வை.மு.கிருட்டிணமாசாரியர், "மூவர்- வான்மீகி வசிட்டர் போதாயனர். வசிட்டர் செய்தது வாசிட்ட ராமாயணம் எனவும், போதாயனர் செய்தது போதாயன ராமாயணம் எனவும் படும். வசிட்டருக்குப் பதிலாக வியாசர் என்று கூறி, வியாசர் செய்த ராமாயணம் அத்யாத்ம ராமாயணம் என்று கூறுவாரும்....உளர்” என உரைப்பர்.

வான்மீகி யிராமாயணம், மகிழ்ச்சிபொங்கும் மகுடஞ் சூட்டு விழாவொடு மங்கல மாட்சியாக முடிகின்றது. அதன் பிற்பட்ட வரலாறு அவலம் மிக்க அமங்கலமாயிருப்பதால், அதன் சுருக்கம் மட்டும் கதைச்சுருக்கம், பிரமன் வரவு, இராமகதைக் கண்கூட்டறிவு, குசலவர் வரவு என்னும் நாற்சருக்கமாக, பாலகாண்ட முகப்பிற் பாவிய (காவிய) முகம்போல் வைக்கப் பட்டுள்ளது.

அத்யாத்ம ராமாயணத்தில் உள்ளவாறு உத்தரகாண்டச் செய்தி, அபிதான சிந்தாமணியிற் பின்வருமாறு

கூறப்பட்டுள்ளது:

66

சுருக்கிக்

இராமர் அரசாண்ட காலத்தில், சம்புகன் என்னுஞ் சூத்திரன் தவஞ் செய்ததால், (ஒரு) பிராமணப்பிள்ளை இறக்க, (அவன் தந்தையாகிய) பிராமணன் அகால மிருத்தியுவென்று விசனப் படுகையில், இதனை நாரதராலுணர்ந்து இராமமூர்த்தி