142
தமிழ் இலக்கிய வரலாறு
வடமொழியாளர், சித்திகளை (பெற்றிகளை) அணிமா (நுண்மை) மகிமா (பருமை), லகிமா (நொய்ம்மை), கரிமா (பளுமை), பிராப்தி (விருப்புப்பேறு). பிராகாமியம் (விருப்பிடஞ் சேறல்). ஈசுரத்துவம் (இறைமை), வசித்துவம் (வயப்படுத்தம்) என எட்டாக வகுத்து அட்டமாசித்தி (எண்பெரும் பெற்றி) என்பர்.
க
இறைமையும் இறையடக்கலும் இயலாதனவும் தெய்வப் பழிப்பு மாதலால், தமிழர் கொள்கைக்கும் உண்மைக்கும் மாறாம். ஏனையவை உடன்பாடாகவோ எதிர்மறையாகவோ முற்கூறிய வற்றுள் அடங்கும்.
ஒரு வகுப்பார் பெற்றிகளை எண்வகையாக வகுத்துக் கூறிய மட்டில், அவற்றைப் பெற்றவராகார். பிறப்பில் ஏற்றத் தாழ்வு வகுத்துப் பிறரை இகழ்வோர், உள்ளத் தூய்மையும் இல்லார்; உலகத் துறவுங் கொள்ளார்; ஒருவகைப் பெற்றியும் ஒல்லார்.
கடவுள் என்னுஞ்சொல், இலக்கியத்தில், சிவன் அல்லது திருமால், முத்திருமேனிகளுள் ஒருவன், வானவன், அருகன், புத்தன், முனிவன், குரவன் முதலிய பொருள்களில் தவறாக ஆளப்பட்டு விட்டதனால், இன்று தன் தொல்சிறப்பை இலக்கிய வழக்கில் இழந்துள்ளது. ஆயினும், உலகவழக்கில் அதன் உயர்வு குன்றவில்லை.
தமிழகத்திற் சித்தர் தொன்றுதொட்டுப் பல்வேறு காலத்திற் பற்பலர் இருந்து வந்திருக்கின்றனர். ஆயினும், பதினெண்மர் என்று ஒரு குறித்த தொகையினரையே இலக்கிய மரபு கூறி வருகின்றது. அப்பதினெண்மர் யார் என்று எப் பண்டை நூலுங் கூறவில்லை. அண்மைக்கால வெளியீடுகளே அவர் வெளியீடுகளே அவர் பெயர்களைப் பின் க்
வருமாறு சிறிதும் பெரிதும் வேறுபடக் கூறிவருகின்றன.
1.நிசா (ஜா)னந்த போதம் (19ஆம் நூற்றாண்டில் அருணாசல குரு இயற்றியது)
1. உதளிகன் (?)
10. பிரமமுனி
2. பொதிகை முனிவர் (அகத்தியர்) 11. உரோமமுனி
3. போகர்
4. நந்தீசர்
5. பிண்ணாக்கீசர்
6. கருவூரர்
7. சுந்தரானந்தர்
8. திருமூலர் (5-6ஆம் நூற்.)
9. கொங்கணர்
12. வாசமுனி
13. குருபரமமுனி 14. கமலமுனி 15.கோரக்கர்
16. சட்டைமுனி
17. மச்சமுனி
18. இடைக்காடர் (15ஆம் நூற்.)