இடைக்காலம்
167
17ஆம் நூற்றாண்டு
இராபர்ட்-டி-நொபிலி (Robert De Nobili) என்னும் இத்தாலிய ஏசுசபைக் குரவர் 1606-ல் தமிழ்நாடு வந்து தமிழும் சமற்கிருதமுங் கற்று, மதுரையில் தங்கி, காவியும் பூணூலும் அணிந்து மரக்கறியுணவுண்டு, தத்துவ போதகர் என்று தம் பெயரை மாற்றி, தம்மை இத்தாலியப் பிராமணர் என்று சொல்லிக்கொண்டு, நூற்றுக்கணக்கான பிராமணரைக் கிறித்தவராக்கினார்.
அவர் எழுதிய உரைநடைநூல்கள் ஞானோபதேச காண்டம், மந்திரமாலை, ஆத்தும நிர்ணயம், தூஷண திக்காரம், சத்தியவேத லஷணம், சகுணநிவாரணம், பரமசூட்சுமாபிப் பிராயம், கடவுள் நிர்ணயம், புனர்ஜென்ம ஆட்சேபம், நித்திய ஜீவன்சல்லாபம், தத்துவக் கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம், தவசுச் சதம், ஞானதீபிகை, நீதிச்சொல், அநித்திய நித்திய வித்தியாசம், பிரபஞ்ச விரோத வித்தியாசம் முதலியன.
அவர் இறுதிக் காலத்தில் இனமறியப்பட்டு மதிப்பிழந்து மயிலையில் 1656-ல் இறந்தார்.
18ஆம் நூற்றாண்டு
வீரமா முனிவர் என்று தமிழராற் பாராட்டப் பெற்றவரும் இத்தாலிய ஏசுசபைக் குரவருமான கான்சுத்தாந்தியசு யோசேப்பு பெசுக்கி (Constantius Joseph Beschi), தம் திருவூழியத்திற் கேற்றவாறு பன்மொழிக் கல்வித்திறனும் தருக்க மதிநுட்பமும் நாவன்மை பாவன்மையும் வசியத் தோற்றப் பொலிவும் அயராவுழைப் பாற்றலும் இறைவனருளால் இயற்கையிலமையப் பெற்று, தம் தாய்நாட்டிலேயே இத்தாலியம், இலத்தீனம், L பிரெஞ்சு, இசுப்பானியம், போர்த்துக் கீசியம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய இலக்கியச் செம் மொழிகளை முற்றுக்கற்று, 1707-ல் இந்தியா வந்து 1708-ல் மதுரையடைந்து தமிழ் தெலுங்கு சமற்கிருதம் ஆ கிய மும்மொழியும் செம்மையாய்க் கற்றுத் தேர்ச்சிபெற்று, தம் ஊண் உடை உறையுள் வழிச்செலவு வாழ்க்கை முறை ஆகியவற்றை அக்காலத்திற்கேற்ப ஒரு தமிழத் திருமடத் தம்பிரான்போல் ஆரவாரத் துறவொழுக்க முறையில் அமைத்துக் கொண்டு, நெல்லை மாவட்டக் காமயா நாயக்கன்பட்டி, கயத்தாறு, கல்லுப்பட்டி முதலிய ஊர்களில் முன்னும், திருச்சிராப் பள்ளி மாவட்ட வடுகப்பட்டி (திருக்காவலூர்), ஆவூர் முதலிய இ ங்களிற் பின்னும், வதிந்து, கிறித்தவ மதப் பரப்புரை செய்து பாடியும் வரைந்தும் அருளிய கிறித்தவ இலக்கியம் வருமாறு: