உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

173


நூலாசிரியர் குறிப்பும் இம் முடிபையே வற்புறுத்துகிறது” என்று உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையும், (சேரமன்னர் வரலாறு, ப. 5) கூறியிருத்தல் காண்க.

திருவிதாங்கூர் என்பது திருவதங்கோடு என்பதன் திரிபு.

தொல்காப்பியர் வேங்கட மலைக்கும் குமரி யாற்றிற்கும் இடைப்பட்ட நாட்டு இருவழக்குத் தமிழையும் ஆய்ந்தபின், முழுகிப் போன பழம்பாண்டி நாட்டுத் தனித்தமிழ் இலக்கண நூல்கள் சில கிடைக்கப்பெற்றார் என்பது,

"செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி

99

(சி. பா.) என்பதனாலும் அவர் தென்திருவாங்கூர் நாட்டிலேயே வதிந்தா ரென்பது யா, பிடா, தளா, உதி, புளி, எரு, செரு, ஒடு, சே, விசை, பனை, அரை, ஆவிரை, ஆண், இல்லம், எகின், ஆர், வெதிர், சார், பீர், பூல், வேல், ஆல், குமிழ், இருள் என்னுங் குறிஞ்சி முல்லை நிலைத்திணைப் பெயர்களையே,

"பனியென வரூஉம் காலவேற் றுமைக்கு

அத்தும் இன்னும் சாரியை யாகும். "வளியென வரூஉம் பூதக் கிளவியும்

99

அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப.

99

"மழையென் கிளவி வளியியல் நிலையும்.

"வெயிலென் கிளவி மழையியல் நிலையும்.

99

என்று சேரநாட்டு வழக்கொடு தொல்காப்பியப் புணரியல்களிற் கூறியிருப்பதனாலும்; அவர் பாணினி காலத்திற்கு முந்தியவர்

என்பது,

"மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

99

(சி. பா.)

தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றி என்பதனாலும்; அவர் தொல்காப்பியத்தை அரங்கேற்றியபோது வைகை மதுரையும் கடைக்கழகமும் தோன்றவில்லை யென்பது, "நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து” என்பதனாலும், அவர் காலத்திலேயே தமிழில் வடசொற் கலக்கத் தொடங்கிவிட்ட தென்பது,

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.

99

(சி.பா.)

(எச்ச. 1)