178
தமிழ் இலக்கிய வரலாறு
நூறென் கிளவி நகார மெய்கெட ஊ ஆ வாகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும்.
99
(குற்.58) இதுவும் முற்காட்டியது போன்ற மந்திரப் புணர்ச்சியே. ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் என்று புணர்க்கின்றது. தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்பதே உண்மையான புணர்ச்சி.
I
அக்கு, இக்கு, வற்று என்று புணர்ச்சிச் சாரியைகளே இல்லை. 'கரம்' குறிற் சாரியை; 'காரம்' நெடிற் சாரியை; 'கான்' ஐ ஒள என்னும் புணரொலிச் சாரியை; ‘அ-கேனம்’ ஆய்தச் சாரியை. இத்தகைய விளக்கம் தொல்காப்பியத்தில் இல்லை.
"சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அஐ ஒளஎனும் மூன்றலங் கடையே”.
என்பதன் ஈற்றடிக்குள்ள,
66
'அவைஒள என்னும் ஒன்றலங் கடையே”
(மொழி.29)
என்னும் பாடவேறு பாட்டை ஏற்றுக்கொள்ளின் மறுப்பிற் கிடமில்லை.
"மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்(று) ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே "சொல்லிய மரபின் இளமை தானே
99
(மர. 1)
சொல்லுங் காலை அவையல திலவே"
(LOIT. 26)
என்று வரையறுத்துக் கூறிவிட்டார் தொல்காப்பியர். ஆயின், அவர் சொல்லாத இளமைப் பெயர்கள் அணங்கு, கசளி, கயந்தலை, கரு, கருந்து, குஞ்சு, குருமன், குழந்தை, குன்னி, செள், சேய், நன்னி, நாகு, பொடி, முனி எனப் பல வுள. இவையெல்லாம் பிற்காலத்தன வென்று சொல்ல முடியாது.
இங்ஙனம் பல்வேறு மறுக்களும் மயக்குகளும் இருப்பதால், மொழியாராய்ச்சி யில்லாதார் தொல்காப்பியத்தை ஆராய
முடியாது.
பலர், இருக்கின்ற நூல்களுள், தொல்காப்பியந்தானே முந்தியதும், முதன்மையானதும் முழுநிறைவானதும் தமிழ்