உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

தமிழ் இலக்கிய வரலாறு


ரால் இது மிகப் பெருமை யடைந்துள்ளது. தொல்காப்பி யத்திற்குப் பிற்பட்ட யாப்பிலக்கண வளர்ச்சியையும் வேறுபாடு களையும் விளக்குவதில், இந் நூலும் உரையும் தலைசிறந்தன.

யாப்பருங்கலகாரிகை

இதுவும் அமிதசாகரனார் இயற்றிய யாப்பிலக்கண நூலே. இது 47 கட்டளைக் கலித்துறை நூற்பாக்கொண்டது.

நேமிநாதம்

6

12ஆம் நூற்றாண்டு

இது குணவீர பண்டிதர் எழுத்துஞ் சொல்லும்பற்றி இயற்றிய சிற்றிலக்கண நூல். இதன் சிறுமைபற்றி இது சின்னூல் எனவும் படும். இது 71 வெண்பா நூற்பாக் கொண்டது; நேமிநாதன் என்னும் அருகன் பெயராற் செய்யப்பட்ட மையால், நேமிநாதம் என்னும் பெயரது.

தண்டியலங்காரம்

து தண்டி யென்பவர், வடமொழியில் தண்டியாசிரியர் இயற்றிய காவியதரிசம் என்னும் அலங்கார நூலைத் தமிழில் மாழிபெயர்த்துச் செய்த அணிநூல். கடைக்கழகக் காலத்தில் தமிழில் இயற்றப்பட்ட அணியியல் என்னும் நூல் இறந்து பட்டது. 13ஆம் நூற்றாண்டு

நன்னூல்

இது தொண்டைமண்டலச் சனகாபுரத்திலிருந்த பவணந்தி என்னும் சமண முனிவரால், முனிவரால், எழுத்துஞ் சொல்லும் பற்றி இயற்றப்பட்ட நிறைவான நூல்; அகவல் யாப்பில் பொதுப் பாயிரம் நீங்கலாகப் 407 நூற்பாக் கொண்டது.

"தன்னூர்ச் சனகையிற் சன்மதி மாமுனி தந்தமைந்தன் நன்னூ லுரைத்த பவணந்தி மாமுனி நற்பதியும்

சின்னூ லுரைத்த குணவீர பண்டிதன் சேர்பதியும் மன்னூ புரத்திரு வன்னமின் னேதொண்டை மண்டலமே" என்பதால், இந் நூலாசிரியர் ஊர் அறியப்படும்.

'குணகடல் குமரி குடகம் வேங்கடம்

எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள்