188
தமிழ் இலக்கிய வரலாறு
இயன்றது. இதன் ஆசிரியர் பெயரும் உரையாசிரியர் பெயருந் தரியவில்லை. நூற் பெயரும் திரு. வையாபுரிப் பிள்ளை ட்டதே. இதன் சில பகுதிகள் கிடைத்து அச்சிடப்பட்டுள்ளன. ஆயினும், இதை இறந்துபட்ட நூல் வரிசையிற் சேர்ப்பதே தக்கதாம்.
மாறனகப் பொருள்
16ஆம் நூற்றாண்டு
து, ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயரால், களவியல், கற்பியல், என்னும் ஈரியல்களையும் 106 அகவல் நூற்பாக்களையும் கொண்டதாக, மாறன் என்னும் நம்மாழ்வார் பெயரில் இயற்றப்பட்ட அகப் பொருளிலக்கண நூல்.
மாறனலங்காரம்
இதுவும் திருக்குருகைப்பெருமாள் கவிராயர் இயற்றிய நூலே. இது பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என்னும் நாலியல்களும் 327 அகவல் நூற்பாக்களுங் கொண்டு, 64 பொருளணிகளும் 17 மிறைப்பாவுள்ளிட்ட பல்வேறு சொல்லணிகளும் கூறும் அணியிலக்கண நூல்.
இலக்கண விளக்கம்
17ஆம் நூற்றாண்டு
இது, திருவாரூர் வைத்தியநாத தேசிகர், எழுத்திற்குஞ் சொல்லிற்கும் தொல்காப்பியத்தையும் நன்னூலையும், அகப் பொருளுக்கு நம்பியகப் பொருளையும் புறப்பொருளுக்குத் தொல்காப்பியத்தையும், யாப்பிற்கு யாப்பருங்கலக் காரிகையை யும், அணிக்குத் தண்டியலங்காரத்தையும் தழுவி அகவல் நூற்பாவால் ஐந்திலக்கண நூலாகத் தொகுத்த தொகுப்பு நூல்.
2. இலக்கியம்
பதினெண் மேற்கணக்கு(கி.மு. 3ஆம் நூற். கி.பி. 3ஆம் நூற்.) பத்துப்பாட்டுப் பொதுவிலக்கியம்
(2) பொருநராற்றுப்படை
இது, முடத்தாமக் கண்ணியார் கரிகாற் பெருவளவன்மீது பொரு நராற்றுப்படையாகப் பாடிய 248 அடிகொண்ட அகவல்.