உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

தமிழ் இலக்கிய வரலாறு


(2) குறுந்தொகை


வரை,

து, திப்புத்தோளார் முதல் அம்மூவனார் இருநூற்றைவர் அகப்பொருள்பற்றிப் பாடிய 400 குற்றகவற்பாத் திரட்டு. இதைத் தொகுத்தவன் பூரிக்கோ. இதன் பாக்கள் நாலடிச் சிறுமையும் எட்டடிப் பெருமையும் உடையன.

(3) நற்றிணை

இது, கபிலர் முதல் ஆலங்குடி வங்கனார் வரை நூற்றெழு பத்தைவர் அகப்பொருள்பற்றிப் பாடிய 400 அகவற்பாத் தொகுப்பு. தைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. இதன் பாக்கள் ஒன்பதடிச் சிறுமையும் பன்னீரடிப் பெருமையும் உடையன.

(4) அகநானூறு

இது மாமூலனார் முதல் உலோச்சனார் வரை நூற்று நாற்பத்தைவர் அகப்பொருள்பற்றிப் பாடிய 400 அகவற்பாத் தொகுப்பு. இதைத் தொகுத்தவன் மதுரை உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திர சன்மன்; தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இத்தொகைப் பாக்கள் பதின்மூவடிச் சிறுமையும் முப்பத்தோரடிப் பெருமையும் உடையன. முதல் 120 பாக்கள் களிற்றியானை நிரை யென்றும்; 121 முதல் 300 வரைப்பட்ட பாக்கள் மணிமிடைபவளம் என்றும், இறுதி நூற்பாக்கள் நித்திலக்கோவையென்றும் பெயர் பெறும்.

6

இத் தொகை புறநானூற்றை நோக்கி அகநானூறு எனப் பட்டது: குறுந்தொகையை நோக்கி நெடுந்தொகையெனப்படும். (5) புறநானூறு

இது முரஞ்சியூர் முடிநாகராயர் முதல் கோவூர் கிழார்வரை பல புலவர் புறப்பொருள்பற்றிப் பாடிய 400 அகவற்பாத் தொகுப்பு. சில பாக்கள் சிதைந்திருப்பதனால், அடித்தொகையின் சிறுமை பெருமை தெரியவில்லை. இத் தொகைப் பெயர் புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு எனவும் வழங்கும்.

(6) கலித்தொகை

இது, சேரமான் பெருங்கடுங்கோ பாடிய 35 பாலைக்கலியும், கபிலர் பாடிய 25 குறிஞ்சிக்கலியும், மதுரை மருதனிளநாகனார் பாடிய 35 மருதக்கலியும், சோழன் நல்லுருத்திரன் பாடிய