உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 (1) தெய்வப் பெயர்த்தொகுதி (2) மக்கட்பெயர்த்தொகுதி (3) விலங்கின் பெயர்த்தொகுதி (4) மரப் பெயர்த்தொகுதி (5) இடப்பெயர்த் தொகுதி தமிழ் இலக்கிய வரலாறு (7) செயற்கைவடிவப் பெயர் தொகுதி (8) பண்பு பற்றிய பெயர்த் தொகுதி (9) செயல் பற்றிய பெயர்த் தொகுதி (10) ஒலி பற்றிய பெயர்த் தொகுதி (II) ஒருசொற் பல்பொருட் பெயர்த்தொகுதி (6) பல்பொருட்பெயர்த்தொகுதி (12) பல்பொருட் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி இப் பன்னிரு தொகுதியும், ஒருபொருட் பலசொல், பல பொருளொருசொல், பல்பொருள் தொகுதி என்னும் மூவகையுள் அடங்கும். ஒருபொருட் பல சொற்களைத் தனித்தனி ஒப்பொருளி (synonym) என்றும், பலபொரு ளொருசொல்லைப் பல்பொருளி (homonym) என்றும், சொல்லாம். உரிச்சொல் எல்லாம் செய்யுளில் வரும் அருஞ்சொல்லே யாதலால், உரிச்சொல் என்பது செய்யுட்குரிய சொல்லே, "ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல்' என்று நன்னூலார் கூறுதல் காண்க. " (நன். 442) சொல் பலபொருட்கும் பலசொல் ஒருபொருட்கும் உரிமை தோன்றுதல் என்பது, நால்வகைச் சொல்லிற்கும் பொதுவாதலால், உரிச்சொல்லிலக்கணமாகாது. பெயரும் வினையும் இடையும் உரிச்சொல்லிலுமிருத்தலால், உரிச்சொல் இலக்கண வகைச் சொல்லும் ஆகாது. தொல்காப்பியர் செய்யுட் குரிய அருஞ் சொற்களையே ஒவ்வொன்றாக எடுத்துப் பொருள் கூறி, அங்ஙனமே ஏனையவற்றிற்கும் பொருள் காணுமாறு, "பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல் என்று கூறுதல் காண்க. (உரி. 1) அதிர்வு, தீர்தல், தீர்த்தல், பழுது, முழுது, கம்பலை, செழுமை என்னுஞ் சொற்களைச் செய்யுட் சொல்லாக அல்லது அருஞ் சொல்லாகக் குறித்தமை, தொல்காப்பியரின் இனவயன்மை யையே காட்டும். எம்மொழியிலும் எளிய சொல்லும் அயலார்க்கு அருஞ் சொல்லாயிருப்பதே இயல்பு. உரிச்சொற் றொகுதிகளை அல்லது சுவடிகளை அவற்றின் ஆசிரியர் பெயரொடு சார்த்தி, உரிச்சொல் என்றே பொதுப்படக் கூறினர் முன்னோர்.