உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

"செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன் பொருப்புக்கு நாயகனைப் புல்ல

-

மருப்புக்குத்

தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும் வண்டே விளக்குமா றே.

-

'விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல் வந்தாலும் பெண்ணை இடத்திலே வைத்த இறைவர் சடாம குடத்திலே கங்கையடங் கும்.”

இரட்டுறற்பா

CC

'ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும்

ஓடி மண்டை

பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடும்பாம் பெள்ளெனவே யோது.

99

"நீரில் உளதால் நிறம்பச்சை யால்திருவால்

பாரில் பகைதீர்க்கும் பான்மையால் சாருமனுப் பல்வினையை மாற்றுதலால் பாரீர் பெருவான வில்விண்டு நேர்வெற் றிலை.

99

"சென்னிமுக மாறுளதால் சேர்கரமூன் நாலுகையால் இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால்

-

மன்னுகுளக்

கண்ணுறுத லானுங் கணபதியுஞ் செவ்வேளும் எண்ணரனும் நேராவ ரே.

99

"கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும் குத்தி உலையிலிட வூரடங்கும் ஓரகப்பை யன்னம்

இலையிலிட வெள்ளி யெழும்.

99

"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியாரே.

99

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன் அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் விக்கா இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி ஒருமாவின் கீழரையின் றோது."

இவற்றுள்ளுஞ் சில குறிப்பனைப் பாக்களே.

205