உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

தமிழ் இலக்கிய வரலாறு

கலங்கள் பலவற்றைத் திடுமென்று பெற்றதனால், அரசிறை யதிகாரிகள் அதைப் புதையலெடுத்த தென்று கருதி.

6

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்

99

(குறள்.756)

என்னுங் குறளொத்த பண்டைக்காலச் சட்டப்படி அப்பிராம ணனைச் சிறையிலிட்டனர். அணிகலம் வந்த வழியைத் தக்க சான்று கொண்டு அதிகாரிகளிடம் அல்லது அரசனிடம் விளக்கிச்சொல்லி, தண்டனை யினின்று தப்பியிருக்கலாம். ஆயின், வார்த்திகன் மனைவி நிலத்தில் விழுந்து அழுது புரண்டதும், காளிகோயிலை அடைக்கச் செய்ததும், ஆரியச் சூழ்ச்சியேயாகும்.

பாண்டியன் நெடுஞ்செழியன் அதையறிந்தபோது, அணி கலங்களைத் திருப்பி இழப்பீடு செய்துவிட்டு, செய்துவிட்டு, ஆராயாது சிறைப்படுத்திய அதிகாரிகளைத் தண்டித்திருந்தால், அதுவே போதுமானது. ஆயின், தானே மன்னிப்புக் கேட்டதுடன், தங்காலொடு வயலூரையுந் தானமாக வழங்கின பின்னும், வார்த்திகன் சினந் தணியாமையால், அவன் காலில் விழுந்து வணங்கியது, கண்கண்ட தெய்வம் போன்ற பாண்டியனின் பதவிக் கும், “ஆரியப்படை கடந்த” என்னும் அவனது அடைமொழிக்கும் இழுக்கான மாபேரிழிவாகும். இதை யுணர்ந்தே இளங்கோவடி களும், அவன் இழிசெயலை,

99

"கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே. என்று ஓர் அணியால் மறைத்துக் கூறினார்.

(சிலப்.23:120-2)

இந் நிகழ்ச்சியால், வார்த்திகனின் வரையிறந்த இனச் செருக்கும் இடங்கொடுத்தால் மடம்பிடுங்குந் தன்மையும், ஓர் ஏழைப் பிராமணன் காலில் விழுந்து வணங்குமளவு நெடுஞ் செழியனின் மானங்கெட்ட தன்மையும் ஏமாளி இயல்பும், புலனாகின்றன.

(3) முதலாம் இராசராசன் என்னும் அரசவரசன் (அருண்மொழித் தேவன்)

10ஆம் நூற்றாண்டிற் கோவில்களில் தேவாரம் ஓதுதலைத் தடுத்தற்பொருட்டு, ஆரியப் பூசாரியர் தேவார ஏடுகளை யெல்லாம் தொகுத்துத் தில்லையம்பலத்தில் ஓர் அறைக் குள்ளிட்டுப் பூட்டி, பெரும்பகுதியைச் சிதலரிக்க விட்டு விட்டனர்.