உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 217 இவற்றுள், துலைநிறை, பொன்பிறப்பு, ஆவாயிரம் என்பன பெருவழக்கானவை. ஒவ்வொரு போர் வெற்றியின் பின்பும், ஒரு பிராமணத் தலைவற்குத் துலைநிறைப் பொன் தானஞ்செய்வது மூவேந்தர் மரபு. சேரன் செங்குட்டுவன் வடநாட்டுப் போர் வெற்றியின்பின், மாடல மறையோனுக்குத் தன் நிறையான 50 துலாம் பொன் தானஞ் செய்தான். எச்சிறப்புப் பற்றியும் தமிழர்க்கு இத் தானமில்லை. பொன்பிறப்பென்பது, தானஞ்செய்பவன் தான் புகுந்து வெளிவரக்கூடிய அளவு பொன்னாற் பெரிய ஆவுருவஞ் செய்து, அதனை ஊடுருவியபின் அதை ஒரு பிராமணனுக்கு அளிப்பது. அங்ஙனஞ் செய்த அல்பிராமணன் பிராமணப் பிறப்பை யடைவான் என்பது, மூடநம்பிக்கையை வளர்க்கும் துணிச்சலான ஏமாற்றே. மூவேந்தருக்குப்பின், திருவாங்கூர் அரசரும் தஞ்சை விசயராகவ நாயக்கரும், பிராமணர்க்குப் பொன்பிறப்புத் தானங் கொடுத்து வந்தனர். "கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்(கு) அருங்கல நீரொடு சிதறி. 22 "ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறைய பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து. 22 "ஆவொடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்னினிதே " (புறம்.361) (புறம்.367) (இனி. நாற். 22) என்று, புலவர் கூற்றுகளெல்லாம், உயர்பொருட் கொடை களைப் பிராமணர்க்கே வரையறுத்துவிட்டன. பிராமணர் பெற்ற பூசனையுரிமை மூவேந்தரும், அரண்மனைச் சடங்கும் திருக்கோவில் வழிபாடும் சமற்கிருதத்தில் நடத்துமாறு ஆரியப் பூசாரியரை வழிவழி நிலையாக அமர்த்திவிட்டதனால், இன்று அதை மாற்றுவது அரிதாயுள்ளது. முதலாம் அரசவரசனின் மகனான இராசேந்திரன், தன் கோயிற் பூசகராகிய சர்வசிவ பண்டிதரைத் தன் மெய்க்கீர்த்தியில் இறைவனோ டொப்ப உடையார் என்று குறித்திருப்பதும், அவருக்கும் ஆரியம் மத்தியம் கௌடம் என்னும் வடநாடு