உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

221

பாணினீயத்தோடு சோம சித்தாந்தமும் அங்குக் கற்பிக்கப்

பட்டது.

சிவசூத்திரம் எனப்படும் முதற் பதினான்கு பாணினீய நூற்பாக்கள், அம் மண்டபத்திலேயே எழுந்தனவென்று குறிக்கப் பட்டதாகத் தெரிகின்றது.

(9) திருவிடைக்கழி

தஞ்சையைச் சேர்ந்த திருவிடைக்கழியில், மலபாரிலிருந்து வந்து வேதாந்தங் கற்ற பிராமண மாணவர்க்கு ஊட்டுப்புரை (இலவச ஊணகம்) ஒன்றிருந்ததாக, 1229ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று குறிக்கின்றது.

இவையெல்லாம் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளி னின்று வெளியிடப் பெறாத (பன்னீராயிரத்திற்கு மேற்பட்ட) வற்றினின்று எத்தனை தெரிய வருமோ, இறந்துபட்டன வற்றுள் எத்தனை குறிக்கப் பெற்றனவோ, அறியோம்.

தெரிந்த செய்திகள். இனி,

இங்ஙனம் மூவேந்தரும் பிராமணர் கல்வியையே கவனித்து வந்ததனால், பிராமணர் வரவரக் கல்வியிலும் அறிவிலும் உயர்ந்தனர்; தமிழர் தாழ்ந்தனர்.

"While we thus find evidence on the nature and organisation of higher studies in Sanskrit, it is somewhat disappointing that we are left with practically no tangible evidence of the state of Tamil learning” I பேரா.K.A. நீலகண்ட சாத்திரியாரே எழுதியிருப்பதை நோக்குக. (The Cholas, p.633).

பிராமணர்க்குத் தனிச்சலுகை

CC

99

'ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் "பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் 'ஆர்புனை தெரியல்நின் முன்னோ ரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர்

99

"ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து

99

(புறம்.9)

99

(புறம்.34)

(புறம்.43)

(புறம்.367)

என்பன பிராமணரை வேறுபடுத்திச் சிறப்பிக்கின்றன.

வரகுணபாண்டியன் தற்செயலாகவும், மூன்றாங் குலோத் துங்கச் சோழன் குற்றத்தண்டனையாகவும், ஒவ்வொரு பிராமணனைத் கொல்ல நேர்ந்தது. அதனால் பிராமணப்பழி