உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

229

புதுத்தெய்வத்தைப் படைத்துக் கொண்டு, விண்டு என்னும் திருமாலை விஷ்ணு என்னும் கதிரவத் தெய்வத்தோடிணைத்துக் காப்புத் திருமேனி யென்றும், சிவனை உருத்திரனோ டிணைத்து அழிப்புத் திருமேனி யென்றும், வகுத்து, முத்திருமேனிக் கொள்கையைத் தோற்றுவித்துச் சிவனியம் மாலியம் என்னும் தமிழ மதங்களை ஆரியவண்ணமாக மாற்றி, படிப்படியாக 28 சிவனிய (சைவ) ஆகமங்களையும், 108 மாலிய மாலிய (வைணவ) ஆகமங்களையும் 77 காளிய (சாக்த) ஆகமங்களையும் அமைத்துக் கொண்டனர். பேரா.P.T. சீநிவாச ஐயங்காரின், 'History of the Tamils' என்னும் தமிழர் வரலாற்றுப் பொத்தகத்தில் ‘The Origin of the Agamas' என்னும் பகுதியைப் (பக்.112-115) பார்க்க.

தமிழரின் கோயிற் கட்டுமானம், தெய்வப்படிமை யமைப்பு, வழிபாட்டுமுறை, கொண்முடிபு, மெய்ப்பொருள் ஆகியவற்றைக் கூறுவதே ஆகமம்.

நூல்

ஆகமம் என்னும் பெயரிற்கே, புதிதாக வந்தது அல்லது தோன்றியது என்பதே பொருள். நீண்ட காலமாக வடநாட்டுச் சிவனியரை ஆண்குறித் ஆண்குறித் தெய்வ வணக்கத்தார்(sisna devas) என்று பழித்துவந்த ஆரியப் பூசாரியர், சிவனியத்தைத் தலைமேற் கொண்டது கவனிக்கத்தக்கது. அவர் தமிழ மதங்களைத் தழுவிய பின், வைதிக சாத்திரம் என்று மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம் என்னும் ஆறு நூன்முறைகள் தோன்றின. நியாயம், வைசேடிகம் இரண்டும் தருக்க நூல்கள். அவற்றுட் பின்னதே சிறந்தது. அது தமிழ ஏரணத்தின் மொழி பெயர்ப்பாகும். ‘அகத்தியத் தருக்க சூத்திரங்கள்' என்பவற்றைக் காண்க. சாங்கியம் என்பது, 27 தனிப்பொருள் கூறும் தமிழ மெய்ப் பொருள்நூலின் மறுவடிவே. ஓகம் என்பது, உயர்நிலை உளத் தூய்மையுடைய துறவியர்க்கே உரியது; தம்மைத் தெய்வப் பிறப் பென்று ஏமாற்றிச் செருக்கிப் பிறரை இழித்துக்கூறி வெறுக்கும் வகுப்பார்க்குரியதன்று. வேதாந்தம் என்பது, உபநிடதம் என்னும் உயரிய மதவியல் அறிவுநூல்களின் பொழிப்பான மறைமுடிபு நூல். ஆரிய வேதம் பற்பல சிறுதெய்வ வழுத்துத் திரட்டே யாதலால், ஒரே முழுமுதற் கடவுளை யுணர்த்தும் உபநிடதத் திற்கும் அதற்கும்,

மண்ணிற்கும் விண்ணிற்கும் போன்று அடைக்கமுடியாத டைவெளியுள்ளது. ஆதலால், ஆரியப் ஆதலால், ஆரியப் பூசாரியர் தமிழ மதங்களைத் தழுவியபின்பே உபநிடதங்கள் தோன்றியிருத்தல் வேண்டும். ஆகவே, மறைமுடிபு என்பது தமிழ மறைமுடிபே யாகும்.