உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

வேதநாயக சாத்திரியார் (1774-1864)

தமிழ் இலக்கிய வரலாறு

தஞ்சைச் சரபோசி மன்னர்க்குப் பையற் பருவத்திலிருந்து அறிவுத்தந்தையாரா யிருந்த சுவார்த்தர் ஐயரால், 12ஆம் அகவையிற் பாளையங்கோட்டையிலிருந்து தஞ்சைக்குக் காண்டுவரப்பட்டு, தரங்கப்பாடிக் கல்லூரியில் தக்க பயிற்சி பெற்றுத் தஞ்சை மறைக் கல்லூரித் தலைமையாசிரியரான வேதநாயக சாத்திரியார், தம் பெரும்புலமையினாலும் இறைவன் திருவருளாலும், ஆரணா திந்தம், பெத்தலேகங் குறவஞ்சி, ஞானத்தச்சன் நாடகம், வண்ணசமுத்திரம், ஞானக் கும்மி, ானநொண் டி 6 ானவுலா, வேதவினா விடையம்மானை, பேரின்பக் காதல், பராபரன் மாலை, சபமாலை, கீர்த்தனைகள் முதலிய பனுவல்களையும் பாடல்களையும் பாடியுதவினார்.

நாடகம்,

சீர்திருத்தச் சபைத் தமிழ்க் கிறித்தவர்க்குள் தலைமை யாகக் கருதப்படும் தமிழ்ப் புலவர் வேதநாயக சாத்திரியாரே. இராமலிங்க அடிகள் (1823-74)

இருபதாம் நூற்றாண்டில் ஓரளவு பெற்றிய (சித்த) முறையில் திகழ்ந்த பெரும்புலவரும் அருட்பாவலரும் சிவமுனிவரும் சிதம்பரம் இராமலிங்க அடிகளே. அவர் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் திருவருட்பா எனப் பெயரிட்டு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.

ஆறு

சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம், ஒழுவி லொடுக்கப் பாயிரவிருத்தி, மெய்ம்மொழிப் பொருள் விளக்கம், திருநெறிக் குறிப்புகள் முதலியன, அவர் எழுதிய உரைநடைச் சிறு பொத்தகங்களும் குறிப்புகளுமாகும்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815-76)

இவர் திருவாவடுதுறைச் சிவ மடத்திலிருந்து நாடறிந்த உ.வே. சாமிநாதையர் முதலிய பெரும்புலவர் பலர்க்குத் தமிழ் கற்பித்த தலைசிறந்த தமிழாசிரியரும்; 16 ஊர்ப்புராணமும் 16 அந்தாதியும் 10 பிள்ளைத்தமிழும் 4 மாலையும், திருவாரூர்த் தியாகராசலீலை, திருவிடைமருதூர் உலா, காழிக்கோவை, எறும்பியீச் சுரவெண்பா, குசேலோபாக்கியானம், ஆனந்தக் களிப்பு முதலிய பனுவல்களும், மிறைப்பாவுள்ளிட்ட தனிப்பாடல்களும் பாடிய நல்லிசைப் பாவலரும்; சூதசங் கிதையை மொழிபெயர்த்த இரு மொழிப் புலவரும்; குமர குருபரர் வரலாறு, சிவஞான முனிவர் வரலாறு ஆகியவற்றை வரைந்த வரலாற்றாசிரியரும் ஆன பல்புகழ்ப் பேரறிஞர்.

பல

இவ்விருபதாம் நூற்றாண்டில் இவரைப்போல் விரிவாகப் பாடிய பாவலர் வேறொருவருமில்லையென, இவரை வியந்து கூறுவர்.