உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

7. புலன்

.

தமிழ் இலக்கிய வரலாறு

"சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலன்என மொழிப புலனுணர்ந் தோரே.

8. இழைபு

'ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா ஐந்தடி யொப்பித்

தோங்கிய மொழியான் ஆங்ஙனம் ஒழுகின் இழைபின் இலக்கணம் இயைந்த தாகும்.

(தொல்.செய்.239)

(தொல்.செய்.240)

இவற்றுள் ஒன்றுகூட இக்காலத்தில்லை. சிலப்பதி காரமும் மணிமேகலையும் னகரமய்யீற்றுப் பாட்டுகளைக் கொண்டிருப்பதால், இயைபு என்னும் வனப்பிற்கு எடுத்துக் காட்டாகும். ஆயின், அவை தொல்காப்பியத்திற் குறிக்கப் பட்டவையல்ல. தொல் காப்பியக்காலம் கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டு; சிலப்பதிகார மணிமேகலை

கி. பி. 2ஆம் நூற்றாண்டு.

காலமோ

தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டுள்ள ஆரியமல்லாத இலக்கண விலக்கியங்களும் மொழிச் செய்திகளும், முதலிரு கழகக் காலத்திற் குரியனவேயன்றித் தொல்காப்பியர் காலத்திற்குரியன வல்ல.

66

66

"முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்

99

66

என்று பனம்பாரனாரும், "என்ப, ," “என்மனார் புலவர்,” நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே,” “எனமொழிப", ஒத்த தென்ப வுணரு மோரே”, “செவ்வி தென்ப சிறந்திசி னோரே” என்றும், பிறவாறும், சார்புநூலாசிரியர் முறையில் தொல்காப்பியனாரும், கூறியிருத்தல் காண்க.

இயைபு

வனப்புப் பாட்டுகள் ஞ், ண், ந், ம், ன் என்னும் ஐம் மெல்லின மெய்களுள் ஒன்றில் இறும். சிலப்பதிகார மணிமேகலையாகிய இரட்டை வனப்புப் பாட்டுகள் ‘ன்‘ என்னும் ஒரே மெய்யில் இறுகின்றன. ஒரு மெய்க்கு ஒரு வனப்பு என்று வைத்துக் கொள்ளினும், ஐம்மெய்க்கும் ஐவனப்பாவது இருந்திருத்தல் வேண்டும். ஒன்றுகூட இன்றில்லை. இங்ஙனமே ஏனை வனப்புகளும்.