உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

கணியம்

தமிழ் இலக்கிய வரலாறு

""

99

(தொல். உயிர்.84)

(தொல். கிளவி. 58)

"திங்களு நாளு முந்துகிளந் தன்ன. "ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம். "மறைந்த வொழுக்கத்து ஓரையும் நாளும். என்னுந் தொல்காப்பிய அடிகள் கணியக் குறிப்பைக் கொண்டன.

மருத்துவம்

99

(தொல். கள. 44)

பொதிய மலையில் வதிந்த அகத்தியர் ஒரு மருத்துவ நூலாசிரியர் என்று சொல்லப்படுவதனாலும், பெற்றிய (சித்த) மருத்துவம் தொன்றுதொட்டு வழங்கிவரும் தமிழ மருத்துவ மாதலாலும், ஒருசில மருந்துப் பெயர்கள் அகத்தியர் பெயரை அடையாகப் பெற்றிருப்ப தனாலும்,

"வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொல் தாங்குத லின்றி வழிநனி பயக்குமென் றோம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே.

99

(தொல். செய்.111) என்னும் தொல்காப்பிய நூற்பாவிலுள்ள மருத்துவக் குறிப் பினாலும், குமரிநாட்டில் மருத்துவ இலக்கிய மிருந்தமை உய்த்துணரப்படும்.

மொழிநூல்

செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் மொழிப் பகுப்பும் இயற்சொல் திரிசொல் என்னும் செந்தமிழ்ச் சொற்பகுப்பும்,

"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.

99

(தொல். எச்ச. 4)

என்னும் கொடுந்தமிழ்ச் சொல் விளக்கமும் வலித்தல் மெலித் தல் விரித்தல் தொகுத்தல் நீட்டல் குறுக்கல் என்னும் சொற்றிரிவு முறைகளும், மொழிநூலின் கருநிலையேயாயி னும், உலகில் முதன்முதற் சொல்லப்பட்டதனால், மொழி நூலின் தொடக்க மேயாம்.

உளநூல்

"எள்ளல் இளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான் கென்ப. "இளிவே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே.

99

(தொல். மெய்ப். 4)

99

(தொல். மெய்ப். 5)