உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைக்காலம்

6. இடைக்கழகம்

இடைச்சங்கம்

69

இனி, இடைச்சங்க மிருந்தார் அகத்தியனாரும் தொல் காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழியும் மோசியும் வெள்ளூர்க் காப்பியனும், சிறுபாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக்கோனும் கீரந்தையுமென இத் தொடக்கத் தார் ஐம்பத் தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும் குருகும் வெண்டாளியும் வியாழமாலையகவலுமென இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல் காப்பியமும் மாபுராணமும் இசைநுணுக்கமும் பூத புராணமு மென இவை யென்ப. அவர் மூவாயிரத் தெழுநூற்றி யாண்டு சங்கமிருந்தார் என்ப. அவரைச் சங்கமிரீஇயினார் வெண் டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத் தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாட புரத்தென்ப. அக்காலத்துப்போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது.

இதன் விளக்கம்

அகத்தியர் தென்னாடு வந்தது கி.மு. 12ஆம் நூற்றாண் டென்று முன்னரே கூறப்பட்டது. அதற்குள் முதலிரு கழக விருக்கையும் மூழ்கிவிட்டன. தொல்காப்பியர் காலம் கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டு. ஆகவே, அகத்தியரும் தொல்காப்பியரும் ஒருகால வாணராகவோ இடைக்கழகப் புலவராகவோ இருந்திருக்க முடியாதென்பது வெள்ளிை

மலை.

தமிழ்ப் புலவர் வரலாற்றில், அகத்தியரையும் தொல் காப்பியரையும் ஆசிரியரும் மாணவருமாக இணைத்தது, உண்மை வரலாற்றிற்கு ஒரு பெரிய இடறுகட்டை யாகும். முதலிரு கழக இலக்கிய மனைத்தும், நூற்பெயரும் நூலாசிரி யர் பெயரும் எதிர்காலத்தில் எவருக்கும் தெரியாவாறு கூட்டுக் கட்டுப்பாட்டுடன் அழிக்கப்பட்டுவிட்டமையால், அகத்தியரே முதல் தமிழாசிரியரும் அகத்தியமே முதல் தமிழிலக்கணமும் ஆகக் கருத நேர்ந்துவிட்டது. அகத்தியம் மாபிண்டம் என்னும் முத்தமிழிலக்கணம். இலக்கணத்திற்கு முந்தியது இலக்கியம் என்பதும், இலக்கணத்துள்ளும் முத்தமிழிலக்கணத்திற்கு