உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைக்காலம்

73

பெயர். (ஒ.நோ : Portsmouth, Plymouth). கயம் = கடல். குமரியாறு கடலொடு கலந்த இடத்திலேயே கபாடபுரம் என்னும் பட்டினம் இருந்திருத்தல் வேண்டும். அதன் பெயரும் அதனொடு முழுகிப் போயிற்று.

ஒருகால், புகார் (ஆறு கடலிற் புகுமிடம்) என்பது போன்றே கயவாய் என்பதும் சிறப்புப் பெயராய் வழங்கி யிருக்கலாம்; அல்லது, புதவம் (வாயில்) என்று பெயரிருந்திருக்க லாம். கபாட என்னும் சொல் கதவம் என்னும் தென்சொல்லின் முறைமாற்றுத் திரிபாயுமிருக்கலாம்.

கடைக்கழகக் காலத்தின் முற்பகுதியிலும் குமரியாறிருந்த தாகத் தெரிவதால், காவிரியாறிருக்கவும் காவிரிப்பூம்பட்டினம் முழுகிப் போனதுபோன்றே, குமரியாறிருக்கவும் கபாடபுரம் என்னும் பட்டினமும் முழுகிப் போயிருத்தல் வேண்டும். அம் முழுக்கும் ஒரு பகுதி முன்னும் ஒரு பகுதி பின்னுமாக இருந்திருக்கலாம்.

தென்னாட்டார் வடதிசையிற் கங்கையாடச் சென்றது போன்றே, வடநாட்டார் தென்றிசையிற் குமரியாட வந்ததும், பண்டைக்காலத்திற் பெருவழக்காயிருந்தது.

"தெனா அது உருகெழு குமரியின் தெற்கும் " "தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும்

99

99

(புறம்.6)

(சிலப், 8: 1, அடியார். உரை)

என்பன குமரியாற்றின் பெருமையைக் காட்டும்.

இடைக்கழக விருக்கையைக் கொண்டது இரண்டாம் அல்லது மூன்றாங் கடல்கோள். அது கி.மு.1500 போல் நிகழ்ந்திருக்க வேண்டும். ஏறத்தாழ அதுவே கீழையாரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலமும்.

ஆகவே, முதலிரு கழகமும் முற்றும் ஆரியத் தொடர் பற்றன என்பதை அறிதல் வேண்டும்.