உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

ஆரிய இலக்கியத் தொடக்கம்

79

இந்திய ஆரியரின் முதல் இலக்கியப் படைப்பு, இருக்கு என்னும் சிறுதெய்வ வழுத்துத் திரட்டே. அது பின்னர் அதனின்று வேள்வி இயற்றுதற்குரிய மந்திரமெல்லாம், தொகுக்கப்பட்டு யசுர் என்றும், வேள்வியிற் பாடக்கூடிய மந்திர மெல்லாந் தொகுக்கப்பட்டுச் சாமம் என்றும், பெயர் பெற்று மூவேத மாயிற்று.

ஆரியரின் முதற்பனுவல் அல்லது வனப்பு (காவியம்) வால்மீகி யிராமாயணமாகும். அதற்கடுத்தது பாரதம்.

(1) மதவிலக்கியம்

2. இடைக்கால இலக்கியம்

1. சிவனிய இலக்கியம்

"சேயோன் மேய மைவரை யுலகமும்’

என்று தொல்காப்பியமும்

99

"தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

"மன்னு மாமலை மகேந்திர மதனிற்

சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்”

"பாண்டி நாடே பழம்பதி யாகவும்

99

(அகத். 5.)

99

(சிவபு.)

(கீர்த்தி.)

(கீர்த்தி.)

(கீர்த்தி.)

"தென்னாடுடைய சிவனே போற்றி

99

என்று திருவாசகமும், கூறுவதால், கிறித்துவிற்கு முன்பே பல சிவனியப் பாடல்களும் பனுவல்களும் தோன்றி அழிந்தோ அழியுண்டோ போயிருத்தல் வேண்டும்.

திருமுருகாற்றுப்படை

இது, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் என்னும் திருச்சீரலைவாய், பழனி என்னும் திருவாவினன்குடி, திரு வேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்னும் ஆறுபடைவீடுகளிற் கோயில் கொண்டுள்ள முருகனிடத்தே, வீடுபெற்றா னொருவன் வீடுபெறக் கருதிய மற்றொருவனை வழிநிலைக் காட்சிகளை வண்ணித்து ஆற்றுப் படுத்தியதாக, கடைக்கழகப் புலவர் நக்கீரர் பாடிய 517 அடி கொண்ட அகவல்.

திருவேரகத்தைக் குடந்தைக் கருகிலுள்ள சுவாமிமலை யென்பர். அது பிற்கால வழக்காதலிற் பொருந்தாது. தென்