உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

ம்

81

முகம் என்னுஞ் சொல்லிற்கு இடம் என்னும் பொருளுண் மையால், முருகனின் ஆறுபடை வீடுகளும் ஆறுமுகம் என்னப் பட்ட ன. அதனால் முருகனுக்கு ஆறுமுகம் (அடையடுத்த இடவாகுபெயர்), ஆறுமுகன் என்னும் பெயர்கள் தோன்றின. வடவர் இதையறியாது, ஆறுமுகம் என்பதை ஷண்முக என்று மொழிபெயர்த்து, ஆரல் (கார்த்திகை) மாதர் அறுவர்பெற்ற பிள்ளையென்று பகுத்தறிவிற்குப் பொருந்தாத ஒரு கதையைக் கட்டி, ஆரியக்கருவே தோன்றுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்குமுன், குமரிநாட்டில் முதன் முதலாகத் தோன்றிய குறிஞ்சிநிலத் தனித்தமிழ்த் தெய்வமாகிய முருகனை ஆரியத் தெய்வமாகக் காட்டி, கார்த்திகேய (ஆரலன்), சரவணபவ (bhava) (நாணற்காடன்), சுப்ரமண்ய (Subrahmanya), (பிராமணர்க்கு நல்லான்) முதலிய பெயர்களைத் தோற்றி விட்டனர். தமிழரும் அக் கதையை ன்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

L

ஆற்றுப்படை யென்பது, ஓர் அரச வள்ளலிடம் பரிசில் பெற்றா னொருவன், பெறக்கருதிய மற்றொருவனை அவனி டம் ஆற்றுப் படுத்தியதைப் பாடிய பாட்டு. பரிசில் பெறற் குரியவர் புலவர், பாணர். பொருநர், கூத்தர், விறலியர் என்பார். இதை,

66

'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்

99

(தொல். புறத். 36)

என்று தொல்காப்பியம் கூறுகின்றது. இதில், புலவர் என்பது விட்டுப்போயிற்று. இக் குறையை,

"புரவலன் பரிசில் கொண்டு மீண்ட

இரவலன் வெயில்தெறும் இருங்கா னத்திடை வறுமையுடன் வரூஉம் புலவர் பாணர்

பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப்

புரவலன் நாடூர் பெயர்கொடை பராஅய்

ஆங்குச் செல்கென விடுப்பதாற் றுப்படை'

(201)

என்று பன்னிரு பாட்டியல் நூற்பா நிறைக்கின்றது.

ஆற்றுப்படை, ஆற்றுப்படுக்கும் அல்லது படுக்கப்படும் வகுப்பாரால், புலவராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொரு நராற்றுப் படை, கூத்தராற்றுப்படை, விறலியாற்றுப்படை என வெவ்வேறு பெயர்பெறும்.