பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பாவேந்தரின் பாட்டுத்திறன்

ஒரு குறுந்தொகைப் பாடல் (37) இது.

தசைபெரி துடையர் நல்களும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழியவர் சென்ற வாறே இது பாலை பாடிய பெருங் கடுங்கோ பாடியது. தோழி கூற்றாக அமைந்தது. தோழி தலைவியிடம் பிரிந்து சென்றவர் கடிது வருவார் என்று சொல்லி ஆற்றுவித்தது.

விளக்கம்: தலைவன் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து சென்றான்; தலைவி அவன் பிரிவை ஆற்றாது வருந்துகின்றாள். அவள் ஆருயிர்த் தோழி அவளை நோக்கி"தோழியே, தலைவர் மிக்க அன்புடையவர். அவர் சென்ற பாலை நிலத்தில் களிறு தன் பிடியை அன்போடு பாதுகாத்து நிற்கும் காட்சியைக் காண்பார். உடனே நின் நினைவு வரும். பாதுகாக்கும் தன் பொறுப்பு அவரைத் தூண்டும். நின்னைப் பாதுகாக்கும். கடமையை எண்ணுவார்; விரைந்து திரும்பி விடுவார். நீ கவலைப் படாதே’ என்று கூறி தலைவியை ஆற்றுவிக்கின்றாள்.

இந்தப் பாடலை இலகுவாக்கி இசைப்பாடல் வடிவில் தருகின்றார் பாவேந்தர்.

அம்மா உன்மேல் - அவர்

அதிவிருப்பம் உடையவர் (அம்)

செம்மையாய் விரைவில் திரும்பினும் திரும்புவார் திரும்பிவந் தின்பம் * நல்கினும் நல்குவார் (அம்)

அன்றவர் சென்ற வழியில் ஆண்யானை, பெண் யானையின் பசியை நின்றயா மரம் உரித்துட்டல் காண்பார், நின்நிலை எண்ணி இன்றே திரும்புவார்’

7. இசையமுது - இரண்டாம் தொகுதி பக்கம் 22