பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 பாவேந்தருடன் சூழ்நிலையை உருவாக்கின. ஆளுங்கட்சியினர் இராஜிநாமா செய்யவேண்டும் என்று புதுவை மக்கள் கோரிக்கை விட்டனர். ஆயிரம் சைக்கிள்களில் இளைஞர்கள் ஒவ்வொரு சட்டசபை உறுப்பினர் வீட்டுக்கும் போய் இராஜிநாமா கேட்டனர். என்ன நடக்குமோ? துப்பாக்கிச் சூடு நடக்குமோ? என்று மக்கள் அச்சமும் பீதியும் கொண்டவர்களாய் இருந்தாலும், அதே நேரத்தில் இராஜிநாமாவைப் பெற்றாக வேண்டும் என்ற உறுதியும் கொண்டிருந்தனர். ஊர்வலம் நடந்த மறுதினம் மகாஜனக் கட்சியின் நிர்வாகக்குழு திவான் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரத்தில் கூடியது. முப்பது சட்டசபை உறுப்பினர்களின் இராஜிநாமாக் கடிதம் தோழர் சுப்பையா கைக்கு வந்தது. பாவேந்தரின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. கூட்டத்தில் அவரால் உட்கார முடியவில்லை. எழுந்து நின்றார். "எத்தனை வருஷமா? எத்தனை வருஷமா? என்னென்ன பாடுபட்டிருப்போம். அதில் எல்லாம் ஒன்றும் வரவில்லை. இதோ பாத்தியா!' என்று தோழர் சுப்பையாவின் கையில் இருந்த இராஜிநாமாக் கடிதங்களை வாங்கிக் கூட்டத்துக்குக் காட்டினார். மகிழ்ச்சியால் கூட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே பேசினார். அதுபோல் அவர்தம்மை மறந்து மகிழ்ச்சியில் கூத்தாடியதை வேறு எங்கும் யாரும் பார்த்திருக்க முடியாது. அதைத் தமது சொந்த அரசியல் வெற்றியாகவே பாவித்து மகிழ்ந்தார் பாவேந்தர். 1958-என்று நினைக்கிறேன். பூமிதான யாத்திரை செய்து கொண்டிருந்தேன். எங்கள் யாத்திரை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ வழியாகச் சென்றது. பாரதிதாசன் உள்ளே இருக்கிறார் என்று யாரோ வந்து கூறினார்கள். மற்றவர்களை அனுப்பிவிட்டு நான் உள்ளே போனேன். ஒரு பெரிய கூடம்-அதில் உயர்ந்த ரகக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. நான்கு அல்லது ஐந்து பேருடன் பாவேந்தர் உரையாடிக் கொண்டிருந்தார். எதிரே வெள்ளி நாணயங்களும் நோட்டுகளுமாக ஒரு சிறு குவியல் கிடந்தது. வழக்கம் போல் விரல்களை மடக்கியபடி சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்தார். நான் எதிரேபோய் வணக்கம் என்றேன். ஏற இறங்க என்னைப் பார்த்தார். வாப்பா உட்கார் எப்போ வந்தே? என்ன துணியெல்லாம் இப்படி? (அப்போது காலை முதல் நடந்ததால் துணியெல்லாம் செம்மண்