பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/6 கொண்டு கழகப் பிரசார பீரங்கிகளாகத் தமிழகத்து மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்தனர். நாவலர் நெடுஞ்செழியன்பேசிய ஒவ்வொரு மேடையிலும் பாவேத் தர் பாடல்களான 'எங்கள் வாழ்வும்', 'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா', 'உலகப்பன்' , 'வாளினை எடடா!' ஆகியவற்றைப் பாடாமல் கீழே இறங்கமாட்டார். அப்பாடல்களை அன் றைய நெடுஞ்செழியன் பாடிக் கூட்டத்தை முடிக்கும் போது இடியிடித்து மழை ஒய்வது போலிருக்கும். இடைப்பாடிக் கூட்டத்தில் நெடுஞ்செழியன் இப்பாடல் களை உணர்ச்சிவசப்பட்டு மேடையில் கூறக் கேட்ட நான், அன்றே அவ்வூர்த் திராவிடர்க்கழகத் தலைவரும் நண்பகு மான காலஞ்சென்ற திரு இரா. தாண்டவனிடத்திலிருந்து 'பாரதிதாசன் கவிதைகள்' என்ற முதல் தொகுதியை வாங்கிவந்து படித்தேன். அன்றிலிருந்து பாரதிதாசன் கவிதைகளுக்கும் எனக்கும் நிலையான தொடர்பு ஏற்பட்டு விட்டது. என் தந்தை ஒரு சுயமரியாதைக்காரர். எங்கள் வீட்டுக்குக் குடியரசும், திராவிட நாடும் தொடர்ந்து வந்து கொண் டிருந்தன. குடியரசில் பாரதிதாசன் பாடல்களும், அவ ரைப் பற்றிய குறிப்புகளும் சில சமயங்களில் வெளியாகும். திராவிடநாடு இதழில், பாவேந்தரை மேலைநாட்டுப் புரட்சிக் கவிஞர்களான ஷெல்லி, வால்ட் விட்மன் ஆகிய வர்களோடும், மராட்டியக் காண்டேகரோடும் ஒப்பிட்டு அண்ணு எழுதிய கட்டுரைகளைப் படித்த போது பாவேந்த ரைப்பற்றி அதிகம் சிந்திக்கத் தொடங்கினேன். மேட்டுர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற காலத்தில் புலவர் குழந்தை, புலவர் இரா. பெ. இராமச்சந்திரனர் போன்ற தமிழறிஞர்களைப் பொங்கல் விழாவின் போது அழைத்துப் பேச வைத்தோம். அவர்கள் பேச்சு பாவேந் தர் பாடல்களின் சில புதிய பரிமாணங்களை எனக்கு அறி