பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்|50 காலில் எடுத்து ஊற்றினர். குயிலில் இவரைப் பற்றிச் சரமாரியாக எழுதி இந்த அளவு அச்சுறுத்தி வைத்திருந் தேன். தமிழகப் புலவர் குழு பாவாணருடைய 50 சொற்கள் பற் றிய ஆராய்ச்சி சரியானதென்று முடிவுசெய்து முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதத்தின் மூலம் இராஜா சர். முத்தைய செட்டியாருக்குச் சிபாரிசு செய்ய முயற்சி எடுத் துக் கொண்டது. முத்தைய செட்டியாரைச் சந்திக்கப் புலவர் குழு திருச்சியில் கி.ஆ.பெ. வீட்டில் தங்கியிருந் தது. நான் ஒரு பக்கமாக நாற்காலியில் அமர்ந்திருந் தேன். எனக்கு எதிரில் புலவர் கூட்டம் அமர்ந்திருந்தது. முத்தைய செட்டியார் வந்தார். புலவர்கள் ப க் க ம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. எனக்கு மட்டும் வணக் கம் செலுத்திவிட்டு நேராக உள்ளே சென்ருர். சிறிதுநேரம் உள்ளே ஏதோ பேச்சு நடந்தது. "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்; அவசரம் வேண்டாம்' என்று எனக்குப் பதில் கூறுவதுபோல் உள்ளே இருந்து பேசினர் முத்தையசெட்டியார். பின் புறப்பட ஆயத்த மர்னர். பாவாணருக்குப் பரிந்துரை செய்ய வந்திருந்த புலவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. செட்டியார் வெளியில் வந்து என்னை வணங்கிவிட்டு 'நான் போய் வருகிறேன்’ என்று கூறி விடைபெற்றுச் சென்ருர். பாவாணருக்குப் பரிந்து குயிலில் நான் எழுதியும், அவர் என்னை வந்து பார்க்கவில்லை. ஒருகால் என் தலையீட்டால் அவருடைய பதவிக்குத் தொல்லை நேரலாம் என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.' D அதன் பிறகு மறைமலையடிகளைப் பற்றி எங்கள் பேச்சுத் திரும்பியது. இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ள தமிழறிஞரையும் மறைமலையாரையும் தொடர்பு படுத்திப் பர்வேந்தர் ஒரு செய்தி குறிப்பிட்டார்.