பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E- முருகு சந்தரம் -இ டெஸ்டிமோனாவுக்கு எல்லா வகையிலும் ஏற்றவன்தான். நான் டெஸ்டிமோனாவைக் காதலித்திராவிட்டால், கடற்செல்வம் முழுவதும் கிடைப்பதாக இருந்தாலும் என் சுதந்தரத்தை அடகு வைத்துவிட்டு இல்லறச் சிறையில் என்னைச் சிக்கவைத்துக் கொண்டிருக்க மாட்டேன்” என்று ஒதெல்லோவே தன் காதலின் ஆழத்தை ஓரிடத்தில் இயாகோவிடம் வெளிப்படுத்தியிருக்கிறான். டெஸ்டிமோனாவின்பால் ஆழமான காதலும் அளவற்ற அன்பும் கொண்டிருந்த ஒதெல்லோவின் உள்ளத்தில் ஐயமும், அவளைக் கொல்லத் துணியும் அளவுக்கு வெறுப்பும் ஏற்படக் காரணம் என்ன என்பது ஆராய்ச்சிக்குரியது. ஒத்தெல்லோவின் பாத்திரப் பண்புகளை ஆராயப் புகுந்த பிராட்லே நுட்பமான சில கருத்துக்களை ஓரிடத்தில் வெளியிடுகிறார் : 'ஒதெல்லோ பிறந்த இனம் அவன் பாத்திரப்படைப்பிலும், நாடகத்திலும் முக்கிய இடத்தை வகிக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஒதெல்லோ கிறித்தவ மதத்தைத் தழுவிய கெளரவமான காட்டுமிராண்டி அவன் தன்னை ஏவல் கொண்ட வெனிசிய நாகரிகத்தின் சில கூறுகளை ஏற்றுக் கொண்டவன்; என்றாலும் இவற்றுக்கு அடியில் ஒடும் மூரினக் குருதிக்கே உரிய விலங்குத் தன்மையும், பெண்களின் கற்பைப் பற்றிக் கீழைநாட்டு மக்கள் பொதுவாகக் கொண்டிருந்த ஐயப்பாடும் அவன் அடிமனத்தில் பதிந்திருந்தன!” ஒதெல்லோவின் இந்தப் பலவீனத்தை இயாகோ சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். இயாகோ சகுனியைவிட மோசமான தீக்குணன் (willon). சேக்ஸ்பியர் படைத்த ஒப்பற்ற பாத்திரங்கள் ஹேம்லட், கிளியோப்பாத்ரா, இயாகோ, ஃபால்ஸ்டாஃப் ஆகிய நான்குமே. இயாகோ வஞ்சகமே வடிவெடுத்த உள்ளமும், கேட்டாரைப் பிணிக்கும் பேச்சாற்றலும் சமயோசித புத்தியும் வாய்க்கப் பெற்றவன். ஆங்கிலக் கவிஞன்