பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் 159 பற்றி, ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டு வாங்கித் திராவிட நாடு சிறப்பு மலரில் வெளியிட்டார். இவர் 1938இல் விழுப்புரத்தில் வாழ்ந்தபோது பால பாரதம்’ என்ற திங்களிதழை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது தான் இவர் பாரதிதாசனை முதன் முதலில் சந்தித்தார். பின்னர் திருச்சியில் குடியேறிய பிறகு 'சிவாஜி'யைத் தொடங்கி வார இதழாகவும், திங்கள் இதழாகவும் பல ஆண்டுகள் நடத்திக் கொண்டிருந்தார். கவிஞர் சுரதாவின் பாடல்களை முதன் முதலாகத் தொடர்ந்து சிவாஜியில் வெளியிட்டு, அவரைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் திருலோகம்தான். இதைச் சுரதாவே நன்றியுணர்வோடு பலமுறை என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார். பாரதிதாசனின் நம்பிக்கைக்கும், நட்புக்கும், அன்புக்கும் உரிய பார்ப்பன நண்பர்கள் இருவர். ஒருவர், திருவள்ளுவர் படத்துக்காக ஜனாதிபதி பரிசு பெற்ற ஒவியர் வேணுகோபால சர்மா மற்றொருவர் திருலோக சீதாராம். ஓர் -gյ ւԸ T oմ T 65) Յ நாள். காலையில் அனுஷ்டானங்களுக்குத் தயாராக இடுப்பில் பஞ்ச கச்சமும், கையில் தர்ப்பையுமாக நின்று கொண்டிருந்தார் திருலோகம். வாசலில் ஐந்தாறு கறுப்புச் சட்டைக் காரர்கள் வந்து திருலோக சீதாராம் வீடு இதுதானா? என்று விசாரித்தனர். அப்போது திருச்சியில் தி.கவினர் குடுமி அறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரம். இந்தக் கூட்டத்தார் எதற்காக நம்மைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று திகைத்துப் போய் நின்றார் திருலோகம். “திருலோக சீதாராமைச் சந்திக்கும்படி பாரதிதாசன் சொல்லியனுப்பினார். தாங்கள் தானா?” என்று கேட்டார்கள் வந்தவர்கள்.