இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
سنہ 124 سا۔
'அருகரு கிருவர்; மிக்க
அன்புண்டு, செயலே இல்லை!"
இரண்டே அடிகளில் முதுமையின் இன்பம் திரண்டு வெளிப்படல் புலமையின் திறமே! அடுத்தது பாவலர் மொழித்திறன்; அதனையும் எடுத்துச் சொல்வேன்; இருந்து கேளுங்கள்: புலவர் ஒருவர் புகன்ற சொற்களின் வளத்தை யறிந்தால் மொழித்திறன் உணரலாம்! பாவேந் தர்க்குப் பழந்தமிழ்ப் பயிற்சியின் ஈவாய் அமைந்தது சொல்திறன்! இதோ!ஒன்று
"நூலேப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி-முறைப்படி
காலையில்படி கடும்பகல்படி!
மாலையிரவு பொருள்படும்படி நூலைப்படி சங்கத் தமிழ் .
நூலைப்படி-முறைப்படி
கற்பவை கற்கும்படி-வள்ளுவர் சொன்னபடி.
கற்கத்தான் வேண்டுமப்படி!
கல்லாதவர் வாழ்வதெப்படி-நூலைப்படி.சங்கத்தமிழ்
நூலைப்படி'-முறைப்படி
அறம்படி-பொருளைப்படி-அப்படியே இன்பம்படி-
இறந்ததமிழ் நான்மறை
பிறந்ததென்று சொல்லும்படி-நூலைப்படி-சங்கத்தமிழ்
நூலைப்படி-முறைப்படி
தொடங்கையில் வருந்தும்படி-இருப்பினும்
- ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகும் என்ற ஆன்ருேர் சொற்படி-நூலைப்படி
சங்கத்தமிழ் நூலைப்படி முறைப்படி
பொய்யிலே முக்காற்படி-புரட்டிலே காற்படி-
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூற்களை ஒப்புவதெப்படி? நூலைப்படி -
சங்கத்தமிழ் நூலைப்படி-முறைப்படி