பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 49 – இழுக்கும் அன்று. மாருக நம் தலைமுறையில் வாழ்ந்த தலை சிறந்த பாவலர் ஒருவர்க்கு நாமும் நன்றி காட்டினுேம் என்ற மனநிறைவும், பெருமிதமும் ஏற்படும் என்பது உண்மை. தென்மொழிச் சார்பில் அன்பர்கள் இதுபோன்ற அறக் க்ொடைகள் வழங்க வேண்டிக்கொள்வது இது மூன்ருவது முறை. பொருளியல் தொல்லே மிகு ந் த இக் காலத்தும் எந்தமிழ் அன்பர்களை இவ்வாறு தூண்டுவது. தங்களுக்குள்ள கடமையுணர்வுகளில் தாங்கள் ஒருசிறு அளவிலாகிலும் ஈடு பாடு கொள்ளுதல் வேண்டும் என்ற அறவுணர்வு பற்றியே. இவ் வேண்டுகோளுக்கு உளமும் உழைப்பும் நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், இக் கடமைச் சுமையை உங்கள் மீது சுமத்தியமைக்கு தம்மைப் பொறுத்தருளுமாறும் வேண்டிக் கொள்ளுகின்ருேம். (சுவடி . ஒலை 5. பக் 47-48. (1967)] பின் குறிப்பு : தென்மொழிச் சார்பில், ஆங்காங்குள்ள அன்பர் கள் பாவேந்தர் குடும்பத்திற்கு அறக்கொடை நல்குமாறு வேண்டிய இம் மேற்கண்ட வேண்டு கோள் வெளிவந்த பின்னர், அதற்கிணங்கிய செந்தமிழ் நன்னெஞ்சங்கள் தந்தம்மாலான கொடையை பாவேந்தர் குடும்பத்திற்கு அனுப் பிவைத்துத் தம் நன்றியுணர்வைக் காட்டினர். அக் கொடையாளர்களின் பெயர்ப் பட்டியலும் அவர்கள் தந்த தொகையளவும், தென்மொழி சுவடி-5, ஒலை-10, ஒலை-11 மற்றும் தென்மொழி சுவடி.6, ஒலை-1, ஒலை-4, ஒலை 5,6 ஓலை-9 ஆகிய இதழ்களில் தொடர்ந்து வெளியிடப் பெற்றுள் ளன. அதன் பின்னரும் அவர் குடும்பத்திற்கு நேரடியாகவே ஓராண்டுவரை அந் நன்கொடை