பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 60.ஏ - புள்ளம் - பதிந்து, மெய்ம்மை சாற்றிநின்றது. அதில் அவரின் சிரிப்பு துள்ளியது: நகைச்சுவை பொதுளிநின்றது; உவகை ஊஞ்சலர்டியது, அன்பு குமிழியிட்டது; அறிவு சுடர் வீசியது: என்பால் அவர் வைத்தி நம்பிக்கையின் ஈரம் கசிந்து தின்றது; அதில் என் தமிழ் உள்ளத்தையும், அதில் கொப் பளிக்கும் உண்மை உண்ர்வையும், அதன் சூட்டையும், குளிர்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார். என் அறிவின் வலிந்த கொள்கையைச் சுட்டியிருந்தார். அவரொடு_நான் பழகிய பண்பு வழுவாத த்ொட்ர்பை உறுதிப்படுத்தியிருந் தார்; எல்லாவற்றுக்கும் மேலாக என் எதிர்காலத்தையே வாழ்த்தி நிலைப்படுத்தியிருந்தார் மொத்தத்தில், அவர் அம் மதிப்புரையில் பயன்படுத்திய சொற்களில் அவரின் பாடல் உள்ளம் கொழுமை கெர்ண்டது. வண்ணமாலைகளின், சுடர்க் கற்றைகளை வீசி, ஒரு பாவல்னின் உள்ளத்தை வேறு ஒரு பாவலன் அறியும் படைப்புக் கமுக்கத்தை உலகுக்குப் புலப் படுத்தியிருந்தார். இவ் வனத்துச் சிறப்புகளையும் உள்ளடக் கிய அவ் வயிர வரிகள் என் உள்ளத்தில் ஒளிவெள்ளத்தைப் டாய்ச்சி உணர்வு மூட்டத்தில் மூழ்குவித்தன. இன்று நினைத்தாலும், அன்றைய மிாலைப் பெர்ழுதின் தென்றல் வீச்சு என் உயிரைக் குளிர்விக்கின்றது. அப் பாவேந்தர் பெருமகளுர் கொய்யாக்கனிக்குத் தந்த மதிப்புரை இது தான்! - - கள்ளம் எப்படி அப்படிக் கடுகளவும் இலாத நெஞ்சினர்; முக் கனிகள் எப்படி அப்படிப் போன்ற முத்தமிழின்மே லன்பர்; --குள்ளம் எப்படி அப்படி இலாப் பெருங் கொள்கை யுடையார்; குறைகடல் எப்படி, அப்படிக் குணநிறை துரைமாணிக் களுர்; --வெள்ளம் எப்படி அப்படிச் செந்தமிழ்ச் சொற்பெருக் கேற மேன்மை எப்படி அப்படிப் பட்டதோர் நடையிற்றம் நல்ல -உள்ளம் எப்படி அப்படித் தந்ததோர் உயர்தமிழ் நூல்தான், உலகம் எப்படி, அப்படிப் . பட்டதார் நிலைகொள் கொய் யாக்கனியே!